“மேக்ஸ்வெல் நல்லா விளையாடினார்.. ஆனா அது கிரேட்டஸ்ட் இன்னிங்ஸ் கிடையாது!” – கங்குலி அதிரடி கருத்து!

0
3854
Ganguly

நடப்பு உலகக் கோப்பை தொடரில் சிறந்த நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த வகையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக யாரும் நம்ப முடியாத வகையில் மேக்ஸ்வெல் ஒரு இரட்டை சதத்தை, இலக்கைத் துரத்தும் பொழுது அடித்தார்.

292 ரன்கள் என்கின்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா அணி 91 ரன்கள் எடுத்த பொழுது முதல் ஏழு விக்கெட்டுகளை இழந்து தோல்வியை எதிர்பார்த்து இருந்தது.

- Advertisement -

இந்த நேரத்தில் கேப்டன் கம்மின்சை உடன் வைத்துக்கொண்டு 128 பந்துகளில் 201 ரன்கள் விளாசி ஆப்கானிஸ்தான் அணியை மட்டும் இல்லாமல் பார்த்தவர்களையும் மிரள விட்டு அட்டகாசமான வெற்றியை கொண்டு வந்தார் மேக்ஸ்வெல்.

இந்த இன்னிங்ஸ் எல்லோராலும் மிகச்சிறந்ததாக பார்க்கப்படுவதற்கான முக்கியக் காரணம் தனியாளாக அவர் வென்று கொடுத்தது மட்டும் கிடையாது. மேலும் அவர் காலில் ஏற்பட்ட தசைப் பிடிப்பால் நடக்கவே முடியாமல் இருந்தும், நின்ற இடத்தில் இருந்து அப்படி ஒரு ஆட்டத்தை ஆடியதுதான் இதில் பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

தற்போது ஐபிஎல் தொடரின் அணியான டெல்லி கேப்பிடல் அணி பயிற்சியில் இருந்து வருகிறது. இதில் அந்த அணியின் பயிற்சியாளர் குழுவில் இருக்கும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இடம் மேக்ஸ்வெல் இன்னிங்ஸ் குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்து பேசிய கங்குலி கூறும் பொழுது “ஆப்கானிஸ்தான் நன்றாக விளையாடுகிறார்கள். அவர்கள் அந்த போட்டியை வென்றுருக்க வேண்டும். மேக்ஸ்வெல் நம்ப முடியாத வகையில் கண்மூடித்தனமாக விளையாடினார்.

அவர் விளையாடியது அற்புதமான இன்னிங்ஸ்தான் ஆனால் அது ஒரு சிறந்த பந்துவீச்சு மற்றும் ஒரு சிறந்த கேப்டன்சிக்கு எதிராக வந்தது கிடையாது. ஆனாலும் அது அற்புதமான இன்னிங்ஸ்.

இதை ஒருநாள் போட்டியின் மிகச்சிறந்த இன்னிங்ஸ் சென்று நான் மதிப்பிடுவேனா என்றால் கிடையாது. நான் சச்சின் மற்றும் விராட் இடம் இருந்து சில நல்ல இன்னிங்ஸ் பார்த்து இருக்கிறேன்.

அவர் தசைப்பிடிப்பில் இருந்த காரணத்தினால் இது பெரிய ஆட்டமாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக அவர் நின்ற இடத்தில் இருந்து 9 சிக்ஸர்கள் மேல் அடித்தார். ஆனால் இதைவிட சிறந்த இன்னிங்ஸ்கள் சிலதை சச்சின் மற்றும் விராட் விளையாடி இருக்கிறார்கள்!” என்று கூறி இருக்கிறார்!

- Advertisement -