வீடியோ.. இங்கிலாந்தில் மிரட்டிய சாய் சுதர்ஷன்.. அணியை காப்பாற்றிய தரமான இன்னிங்ஸ்!

0
1473
Sai

இன்று உலகெங்கும் இருந்து வீரர்கள் வந்து பங்கேற்று விளையாடக்கூடிய பெரிய தொடராக இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தி வரும் ஐபிஎல் தொடர் இருந்து வருகிறது.ஆனால் ஐபிஎல் தொடருக்கு முன்பு உலகெங்கும் இருந்த வீரர்கள் பங்கேற்ற தொடராக இங்கிலாந்து கவுண்டி போட்டிகள் இருந்தன.

இங்கிலாந்தின் உள்நாட்டு கிரிக்கெட் போட்டியான கவுண்டி கிரிக்கெட் விளையாட சென்ற வீரர்களில் சிலர், பணத் தேவைகளுக்காக சென்று விளையாடினார்கள். ஆனால் வேறு சில வீரர்கள் தங்கள் இழந்த பேட்டிங் ஃபார்மை மீட்டுக் கொள்வதற்காக சென்று விளையாடினார்கள். அந்த அளவிற்கு கவுண்டி தரமானதாக இருந்தது.

- Advertisement -

தற்போதைய காலகட்டத்திலும் கூட இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்று கொண்டு தான் இருக்கிறார்கள். இந்த வருடம் இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் விளையாடுவதற்கு வசதியாக, ஸ்மித் மற்றும் லபுஷேன் இருவரும் கவுண்டர் கிரிக்கெட் விளையாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்தியாவில் இருந்து புஜாரா, உமேஷ் யாதவ், அர்ஸ்தீப் சிங் இன்னும் சில வீரர்கள் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார்கள். சச்சின், டிராவிட், கங்குலி போன்றவர்கள் ஏற்கனவே விளையாடி இருக்கிறார்கள். இவர்களுக்கு முந்தைய காலகட்ட இந்திய வீரர்களும் விளையாடி இருக்கிறார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் இடது கை பேட்ஸ்மேன் சாய் சுதர்சன் பிரபல இங்கிலாந்து கவுண்டி அணியான சர்ரே அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார்.

இந்த நிலையில் ஹேம்ப்ஷைர் அணிக்கு எதிராக சர்வே அணி மோதிய கவுண்டி டிவிஷன் 1 போட்டியில் பந்து வீச்சுக்கு சாதகமான சூழ்நிலையில், முதலில் விளையாடிய ஹேம்ப்ஷைர் அணி 210 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆக, இதற்கு அடுத்து களம் இறங்கிய தனது சர்ரே அணிக்காக கடினமான நேரத்தில் 129 பந்துகளில் 73 ரன்கள் சாய் சுதர்சன் சேர்த்தார். இதில் ஒன்பது பவுண்டரிகள் அடக்கம். இறுதியில் அவரது அணி 207 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

நேற்றைய போட்டியில் பந்து வீச்சுக்கு சாதகமான சூழ்நிலையில் மிக முக்கியமான நேரத்தில் அவர் அடித்த இந்த அரைசதம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இருந்து நிறைய இளம் கிரிக்கெட் திறமைகள் உருவாகி வருவது தெரிகிறது. இவர் கூடிய விரைவில் இந்திய அணியில் விளையாடவும் செய்யலாம்!

- Advertisement -