தீபக் சகரின் மன்கட்டிங் ரன் அவுட் முயற்சி ; வைரலாகும் தோனியின் ரியாக்சன் வீடியோ !

0
2782
Dhoni

நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 16வது ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டிக்கான தகுதிச்சுற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்று பந்து வீச முடிவு செய்தது குஜராத் அணி. முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் ருத்ராஜ் மற்றும் கான்வே இருவரும் நல்ல துவக்கம் தந்தார்கள்.

- Advertisement -

சிறப்பாக விளையாடிய ருத்ராஜ் 44 பந்துகளில் ஏழு பவுண்டரி ஒரு சிக்ஸர் உடன் 60 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ஏழு விக்கெட் இழப்புக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் 172 ரன்கள் எடுத்தது.

இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் அணிக்கு சுப்மன் கில் மட்டுமே தாக்குப்பிடித்து 38 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து குஜராத் 157 ரன்கள் மட்டும் எடுத்து 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

- Advertisement -

இதை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பத்தாவது முறையாக ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப்போட்டி இந்த மாதம் 28ஆம் தேதி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடக்கிறது.

இந்தப் போட்டியில் ஒரு முனையில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த சுப்மன் கில்லை தனது நான்காவது ஓவரின் முதல் பந்தில் தீபக் சகர் மெதுவான பவுன்சர் பந்து மூலம் வீழ்த்தினார்.

இதற்கு அடுத்த பந்தை வீச வந்த தீபக் சகர் மன்கட்டிங் ரன் அவுட் முறையில் விஜய் சங்கரை அவுட் செய்ய பார்த்தார். ஆனால் விஜய் சங்கர் கிரீசுக்குள்தான் நின்றார்.

நல்ல விதமாகச் சென்று கொண்டிருந்த ஆட்டத்தில் தீபக் சகர் இப்படி ஒன்றைச் செய்ய, அதைப் பார்த்த மகேந்திர சிங் தோனி இது தேவையில்லாத வேலை என்பது போல நோ நோ என்று மறுத்தபடி சிரித்தார். அதே ஓவரில் அதிக வைடுகளை வீசி தீபக் சகர் மகேந்திர சிங் தோனியை கோபப்பட வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கான வீடியோ லிங்க் கீழே இருக்கிறது!

[24/05, 9:48 am] அஸ்வின் 1: [24/05, 9:58 am] Aadhan: Deepak Sagar’s Mankading Run Out Attempt : Dhoni’s Reaction Video Goes Viral
- Advertisement -