தற்போது ரைசிங் ஸ்டார்ஸ் ஆசியக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி இரட்டைச் சதம் அடித்த வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் குறித்து இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி யுஏஇ அணிக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி பல சாதனைகளை முறியடித்துள்ளார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் சதம் மற்றும் இரட்டைச் சதம் அடித்த சாதனைகளை அவர் படைத்துள்ளார்.
வைபவ் சூர்யவன்ஷி இருபத்து எட்டு சிக்ஸர்கள் மற்றும் ஏழு ஃபோர்கள் விளாசி மிக வேகமாக ரன்கள் குவித்தார். இந்த அதிரடி ஆட்டம் நவீன ஒயிட் பால் கிரிக்கெட்டில் பேட்டிங் ஆதிக்கம் அதிகரித்து வருவதை வெளிப்படுத்துகிறது.
இதுகுறித்து சஞ்சய் மஞ்சரேக்கர் பேசும்போது “வைபவ் விஷயத்தில் ஏதோ சிறப்பான ஒன்று இருக்கிறது, அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவர் செய்தது ஒயிட் பால் கிரிக்கெட் அடைந்துள்ள அபத்தமான நிலையின் மற்றொரு நினைவூட்டலாகும்”
“ரசிகர்கள் விரும்புவது இதுதான் என்று நினைப்பது ஒரு தவறான கருத்து. இது பேட் மற்றும் பந்து ஆகிய இரண்டின் விளையாட்டு. பேட் மட்டுமே அல்ல என்று ஆரம்பித்து வைபவ் சூர்யவன்ஷியின் சாதனை ஆட்டம் பேட் மற்றும் பந்து இடையிலான சமநிலையை கேள்விக்குறியாக்கியுள்ளது” என்று கூறி இருக்கிறார்.






