அண்டர்-19 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் பரபரப்பான இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான த்ரில் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்த மோகித் உல்வா, அணியின் வெற்றிக்கு பிறகு செய்தியாளர்களிடம் மனம் திறந்து பேசினார்.
இந்தியாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 338 ரன்கள் என்ற கடினமான இலக்கை நிர்ணயித்தது. ஒரு கட்டத்தில் இந்திய அணி 252 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் விளிம்பில் நின்றது. அப்போது களமிறங்கிய மோகித் உல்வா மற்றும் மனல் சௌகான் ஜோடி பொறுப்புடன் விளையாடி 9-வது விக்கெட்டுக்கு 57 ரன்கள் சேர்த்து அணியை மீட்டு எடுத்தது.
இந்த த்ரில் வெற்றி குறித்து மோகித் உல்வா விரிவாகப் பேசும்போது, “நான் ஏற்கனவே கிரீஸில் செட்டில் ஆகியிருந்ததால் அந்தப் பொறுப்பை நான் தான் முடிக்க வேண்டும் என்று நினைத்தேன். எனக்கு கிடைத்த முதல் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தினேன். ஒரு பவுண்டரி அடித்தால் ஓவருக்கு 8 ரன்கள் தேவையாக இருந்த நிலை எளிதாகும் என்று எனக்கு நன்றாகத் தெரிந்தது. அதனால் அந்த ஒரு நல்ல பந்துக்காக காத்திருந்தேன், கடைசி பந்தில் அது எனக்குக் கிடைத்தது, அதைச் சரியாகப் பயன்படுத்தி வெற்றியைத் தேடித்தந்தேன் என்று கூறி இருக்கிறார்.”






