இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஶ்ரேயாஸ் ஐயர், சமீபத்தில் நடைபெற்ற ஒரு போட்டியில் அணி பெற்ற தோல்வி குறித்தும், தனது பேட்டிங் மற்றும் பவுலிங் வியூகங்கள் குறித்தும் விரிவாகப் பேசி இருக்கிறார்.
இதுகுறித்து ஸ்ரேயாஸ் ஐயர் பேசும்போது “நாங்கள் அதைப் பார்த்தோம், விக்கெட்டைப் பொறுத்தவரை முதல் இன்னிங்ஸுக்கும் இரண்டாவது இன்னிங்ஸுக்கும் இடையே ஒரு பெரிய வித்தியாசம் இருந்தது, ஆனால் யாருக்குச் சேர வேண்டுமோ அவர்களுக்கு கிரெடிட் கொடுக்க வேண்டும், முதல் பந்திலிருந்து ஹென்றி சரியான ஏரியாக்களில் பவுலிங் செய்த விதம் உண்மையில் சென்சேஷனலாக இருந்தது. முதல் இன்னிங்ஸில் அவர்கள் ஆன் தி ரைஸ் ஆடிய விதத்தைப் பார்த்த பிறகு, நாங்கள் கிட்டத்தட்ட எல்லாவற்றையும் முயற்சித்துப் பார்த்தோம். அதற்குப் பிறகு அவர்கள் முந்நூற்றி முப்பது ரன்களை எடுத்ததைக் கருத்தில் கொண்டு, விக்கெட் பேட்டிங் செய்வதற்குச் சிறப்பாக இருந்தது என்று நாங்கள் நினைத்தோம். வெளிப்படையாகச் சொன்னால் இரண்டு கேட்சுகள் டிராப் செய்யப்பட்டன, ஆனால் அது ஒரு ஆட்டத்தில் நிச்சயமாக நடக்கக்கூடியதுதான்” என்று கூறி இருக்கிறார்.
”ஆனால் ஆமாம், நாங்கள் டிரஸ்ஸிங் ரூமுக்குள் நுழைந்தபோது, நாங்களும் சேஸிங்கை ஈஸியாக க்ரூஸ் செய்து விடுவோம் என்று நினைத்தோம். ஆனால் பந்து உள்ளேயும் வெளியேயும் சீம் ஆன விதத்தால், உள்ளிருந்து கொண்டு இப்படித்தான் ஆடப் போகிறேன் என்று உங்களால் தீர்மானிக்கவே முடியவில்லை. அல்லது நீங்கள் விக்கெட்டுகளைப் பார்த்தாலும் கூட, யாரும் தங்களது விக்கெட்டைத் தூக்கி எறியவில்லை. எல்லாமே நல்ல டெலிவரிகள்தான்” என்று அவர் தெரிவித்தார்.
”இதிலிருந்து வெளியே வருவது மிகவும் முக்கியம், பவுலிங் மற்றும் பேட்டிங் வாரியாக எங்கு தவறு நடந்தது என்பதை வெளிப்படையாக அனலைஸ் செய்ய வேண்டும். ஆனால் மனதின் ஓரத்தில் நாங்கள் ஏற்கனவே இரண்டு போட்டிகளில் வென்றிருக்கிறோம் என்பதும் முக்கியமானது. எனவே அதில் இருந்து நிறைய இன்ஸ்பிரேஷன் பெற்று, ஒரு ஃப்ரெஷ் செட் ஆஃப் மைண்டுடன் நாங்கள் வருவோம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.






