விராட் பாய் அதிரடி அரை சதம்.. ஆனால் ரோகித் பாய் செஞ்ச காரியம்தான் போட்டியை மாத்துச்சு – கில் பேச்சு

0
0

​இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டி குறித்து இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பேசியுள்ளார். இந்த போட்டியில் விராட் கோலி அதிரடியாக 51 பந்தில் 74 ரன்கள் குவித்தார்.

​இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இந்த முதல் போட்டியில் இந்திய பவுலர்களும் ஃபீல்டர்களும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக மிடில் ஓவர்களில் பார்ட்னர்ஷிப்பை உடைத்ததும், மழைக்குப் பிறகு மாறிய பிட்ச் சூழ்நிலையைச் சமாளித்ததும் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

- Advertisement -

​இந்திய அணியின் வெற்றி குறித்து இந்திய கேப்டன் சுப்மன் கில் பேசும்போது “நாங்கள் பந்துவீச்சில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டோம் என்று நினைக்கிறேன். எங்களது ஃபீல்டிங்கும் மிகவும் சிறப்பாக இருந்தது. ரோஹித் பாய் செய்த அந்த ரன் அவுட் ஆட்டத்தின் மொமெண்டத்தை அப்படியே மாற்றியது என்று நினைக்கிறேன். குறிப்பாக அந்த பார்ட்னர்ஷிப் (மிட்செல் & பிலிப்ஸ்), இந்தியாவில் நடந்த தொடரிலும் அவர்கள் இருவரும் மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்ததை பார்த்தோம். ஒட்டுமொத்தமாக எங்களுக்கு இது ஒரு சிறந்த டீம் பெர்ஃபாமென்ஸ்”

“​அன்ஷுல் கம்போஜ் இந்த மாதிரியான கன்டிஷன்களுக்கு ஏற்ற பவுலர், எப்போதும் நிப்பியாக வீசி பந்தை சீம் செய்யக்கூடியவர். பழைய பந்திலும் நன்றாக வீசுவார். விக்கெட்டில் இருந்து பெரிய அளவிலான உதவியும் இல்லாத போது, குர்னூர் பிரார் தனது பேஸ் மற்றும் எக்ஸ்ட்ரா பவுன்ஸ் மூலம் விக்கெட்டுகளை உருவாக்க முடியும் என நினைத்தோம். இவர்கள் இருவருமே பந்துவீசிய விதம் பார்க்க அற்புதமாக இருந்தது”

- Advertisement -

“​செட் ஆகி விளையாடும் போது மழை குறுக்கிடுவது எளிதான விஷயம் அல்ல, மழைக்கு பிறகு விக்கெட் இன்னும் கொஞ்சம் குவிக் ஆகவும் நிப்பியாகவும் மாறியது. அதோடு டார்கெட்டும் குறைக்கப்பட்டது. எனவே நாங்கள் எங்களது நார்மல் கிரிக்கெட்டை விளையாடவே முயன்றோம். விராட் பாய் பேட்டிங் செய்த விதம் எங்களுக்கு விஷயங்களை மிகவும் எளிதாக்கியது. வெலிங்டன் போட்டிக்கு முன்பாக பிரத்யேகமாக எதுவும் இல்லை, இதே பெர்ஃபாமென்ஸை மீண்டும் வெளிப்படுத்துவது தான் விஷயம். எங்களால் தொடர்ந்து கன்சிஸ்டன்சியாக விளையாட முடிந்தது என்றால், நாங்கள் சிறந்த நிலையில் இருப்போம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -