இன்று நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் நான்கு வேகப் பந்துவீச்சாளர்கள் இடம் பெற்றார்கள். குல்தீப் யாதவ் மற்றும் நிதீஷ் குமார் ரெட்டிக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.
இதைத் தொடர்ந்து களம் இறங்கிய நியூசிலாந்து அணி தட்டுத்தடுமாறி 40.2 ஓவர்களில் 185 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அந்த அணிக்கு அதிகபட்சமாக டிம் சைபர்ட் 43 பந்தில் 38 ரன், கிளன் பிலிப்ஸ் 51 பந்தில் 30 ரன், டேரில் மிட்சல் 41 பந்தில் 28 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.
இந்திய அணியின் பந்துவீச்சில் அர்ஸ்தீப் சிங் 4, குர்னூர் பிரார் 3, அன்சூல் காம்போஜ் மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றி சிறப்பாக பந்து வீசினார்கள்.
இதைத் தொடர்ந்து களம் இறங்கிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா 0, கில் 37, ஸ்ரேயாஸ் ஐயர் 15, அக்சர் படேல் 0, கேஎல்.ராகுல் 3, நமன் திர் 5 ரன்கள் எடுத்தார்கள். ஒருமுனையில் மிகச் சிறப்பாக விளையாடிய விராட் கோலி 51 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உடன் 74 ரன்கள் எடுத்து அசத்தினார். இறுதியில் இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு வெற்றி பெற்றது!
மேலும் ஒரு நாள் கிரிக்கெட்டில் மூன்றாவது இடத்தில் களம் இறங்கி 13 ரன்கள் எடுத்து விராட் கோலி சாதனை படைத்தார். இந்த பொசிஷனில் அதிக ரன் எடுத்த வீரராக தொடர்ந்து உலக சாதனை படைத்திருக்கிறார்.






