நியூசி ODI தொடரில் மிடில் ஆர்டரில் இந்த மாற்றத்தை செய்வோம்.. பேட்டிங் வரிசை இப்படித்தான் இருக்கும் – கில் தகவல்

0
0

​இந்திய அணியின் கேப்டன் ஷப்மன் கில் வரவிருக்கும் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் குறித்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

​இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் விரைவில் தொடங்க உள்ள நிலையில், அணியின் பிளேயிங் லெவன் மற்றும் மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசை குறித்த பல்வேறு திட்டங்கள் குறித்து அணித் தரப்பில் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

​இதுகுறித்து இந்திய அணியின் கேப்டன் ஷப்மன் கில் பேசும்போது “நமது அணியின் மிடில் ஆர்டரில் ஐந்தாவது மற்றும் ஆறாவது இடங்களுக்கு நாங்கள் ஒரு ஃப்ளோட்டிங் அப்ரோச் முறையைப் பின்பற்ற திட்டமிட்டுள்ளோம். எங்கள் அணியின் டாப் ஆர்டர் பேட்டர்கள் நிலையாக உள்ளனர், மேலும் அனைவரும் வலது கை பேட்டர்களாக இருக்கிறார்கள். அதனால் மேட்ச் சூழ்நிலைக்கு ஏற்ப களத்தில் ஒரு இடது கை பேட்டர் தேவைப்பட்டால் அக்ஸர் பாய் செல்வார், மேலும் நிலைமைக்கு ஏற்ப கே.எல். பாய் கூட களமிறங்குவார். அந்த வகையில் சற்று நெகிழ்வுத்தன்மையுடன் இருக்கப் போகிறோம்” என்று தொடங்கி,

​”ஹர்திக் பாய் மீண்டும் அணிக்குத் திரும்பும்போது ஏழாவது மற்றும் எட்டாவது இடங்களும் சரியாகக் கவனிக்கப்பட்டுவிடும். உலகக் கோப்பைக்கு முன்பாக இந்த பேட்டிங் குரூப் குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
- Advertisement -