சூரியவன்சிக்கு வாய்ப்பே தராதீங்க.. அதனால இந்த மாதிரி பெரிய பிரச்சனை வரும் – ஸ்ரீகாந்த் எச்சரிக்கை

0
0

​நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்சி களம் இறங்கிய விதம் குறித்து முன்னாள் வீரர் கிரிஸ் ஸ்ரீகாந்த் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

காயமடைந்த இஷான் கிசானுக்கு மாற்றாக அணியில் இடம் பெற்ற அந்த இளம் வீரர், திடீரென நம்பர் 3 இடத்தில் இறங்கி திணறியது குறித்து அவர் விமர்சித்துள்ளார்.
​தொடர்ந்து பெஞ்சில் அமரவைக்கப்பட்டுவிட்டு திடீரென ஒரு போட்டியில் மட்டும் வாய்ப்பு வழங்குவது வீரர்களின் மனநிலையைப் பாதிக்கும் என்று ஸ்ரீகாந்த் சுட்டிக்காட்டினார். அணியின் இந்தத் தேர்வு முறை வைபவ் சூர்யவன்சிக்குத் தேவையற்ற அழுத்தத்தைத் தருவதாகவும் அவர் தெரிவித்தார்.

- Advertisement -

​இதுகுறித்து முன்னாள் இந்திய கேப்டன் கிரிஸ் ஸ்ரீகாந்த் பேசும்போது, “நான் அவருக்காக வருந்துகிறேன், ஏனென்றால் அவர் களத்தில் குழப்பத்துடன் காணப்பட்டார். வைபவ் சூர்யவன்சி விஷயத்தில் இந்தியா பொறுமையாக இருக்க வேண்டும். என்னைக் கேட்டால், நம்பர் 3 இடத்தில் ஒரு வாய்ப்பை மட்டும் கொடுத்துவிட்டு அவரை உட்கார வைப்பதை விட, சூர்யவன்சியை விளையாட வைக்காமல் இருப்பதே மேல். அடுத்த போட்டியில் இஷான் கிசான் திரும்பி வந்துவிட்டால் அவர் பிளேயிங் லெவனில் விளையாடப் போவதில்லை. அதற்காக, அவர் விளையாடாமல் இருந்திருந்தால்கூடச் சிறப்பாக இருந்திருக்கும். இந்த மாதிரி ஒரு போட்டியில் இந்தியா ஷிவம் துபேவை விளையாட வைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்” என்று கூறி இருக்கிறார்.

​மேலும் அவர் பேசும்போது, “சர்வதேச கிரிக்கெட் என்றால் என்ன என்பதை அவர் கற்றுக் கொள்ளும் காலக்கட்டம் இது. சர்வதேச கிரிக்கெட்டில் அழுத்தத்தைக் கையாள்வது எப்படி என்பதைப் புரிந்து கொண்டு அவர் காத்திருக்க வேண்டும். இனிவரும் காலங்களில் இது அவருக்கு ஒரு மனநலப் போராட்டமாக மட்டுமே இருக்கப் போகும். எந்தப் போட்டியில் விளையாடுவோம், எதில் விளையாட மாட்டோம் என்ற குழப்பம் தான் இப்போதைய அவரது பிரச்சினை. ஒரு போட்டியில் விளையாடிவிட்டு, அதில் தோற்றுவிட்டால் மீண்டும் காத்திருக்க வைக்கப்படுவார்கள். அதனால்தான் இன்று பேட்டிங் செய்யும்போது அவரது மனம் இரண்டு இடங்களில் இருந்தது. தனது டெம்பராமெண்டை மாற்றிக் கொள்ளவும் அவர் கற்றுக் கொள்ள வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
- Advertisement -