இன்று நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன் எடுத்து வெளியேறினார்கள்.
இதைத்தொடர்ந்து பிலிப்ஸ் 43 பந்துகளில் 70 ரன், பெவான் ஜேக்கப்ஸ் 46 பந்துகளில் 58 ரன் எடுத்தார்கள். நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. அர்ஸ்தீப் சிங் இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.
இதை தொடர்ந்து விளையாடிய இந்தியா அணிக்கு அபிஷேக் ஷர்மா 27, சஞ்சு சாம்சன் 14, சூரியவன்சி 4, ஸ்ரேயாஸ் ஐயர் 7, அக்சர் படேல் 11 ரன் என அடுத்தடுத்து ஆட்டம் இழந்தார்கள். நடுவில் நமன் திர் அதிரடியாக ஆடி 17 பந்தில் 31 ரன் கிடைத்தார்.
இந்த நிலையில் இந்திய அணியின் வெற்றிக்கு கடைசி மூன்று ஓவரில் 48 ரன்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில் அதிரடி காட்டிய திலக் வர்மா 26 பந்துகளில் 51 ரன்கள், நிதீஷ் குமார் 17 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து இறுதிவரை களத்தில் நின்று இந்திய அணியை வெற்றி பெற வைத்தார்கள். இந்திய அணிக்கு தோல்வி உறுதி என்ற நிலையில் இந்த ஜோடி மிகச் சிறப்பாக விளையாடி காப்பாற்றி இருக்கிறது.






