நமன் திர் இந்திய அணிக்கு மிக முக்கியமானவர்.. ஆனா இந்த சூப்பர் பையனையும் டீம்குள்ள கொண்டு வாங்க – வாசிம் ஜாபர் கருத்து

0
0

​நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைத் தொடர்ந்து, மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரரான நமன் தீரின் அதிரடி பேட்டிங் மற்றும் மேட்ச் வின்னிங் திறனை இந்திய முன்னாள் வீரர் வசீம் ஜாஃபர் வெகுவாகப் பாராட்டிப் பேசியுள்ளார்.

​நமன் தீரின் ஆட்டம் குறித்து வசீம் ஜாஃபர் பேசும்போது, “நமன் தீரின் இன்னிங்ஸ் மிகவும் சிறப்பானது. உங்களின் கிரிக்கெட் வாழ்க்கையின் தொடக்கத்திலேயே இதுபோன்ற ஒரு இன்னிங்ஸ் மூலம் அணிக்கு வெற்றியைத் தேடித்தருவது தன்னம்பிக்கையை பெருமளவில் உயர்த்தும். அவர் டி20 தொடர் அணிக்கு ஒரு நல்ல சேர்க்கை. நடுப்பகுதியில் 2 முதல் 3 ஓவர்கள் பௌலிங் செய்யக்கூடிய ஒரு பவர்-ஹிட்டர் உங்களுக்குத் தேவை. அவரும் ஒரு சிறந்த ஃபீல்டர்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

​தொடர்ந்து அணியின் காம்பினேஷன் பற்றி அவர் பேசுகையில், “தற்காலத்தில் பேட்டிங் நடைபெறும் விதத்தைப் பார்த்தால், அனைவருக்கும் ஒரு மோசமான நாள் அமையும். உங்களிடம் சில ஆப்ஷன்கள் இருந்தால், பௌலர்களை ரொட்டேட் செய்ய முடியும், இதனால் கணிக்கக்கூடிய அணியாக மாற மாட்டீர்கள். எனவே அந்த வகையில் நமன் தீர் உங்களுக்குச் சற்று பேலன்ஸ் தருகிறார்” என்று கூறி இருக்கிறார்.

​நமன் தீர் மற்றும் மற்ற வீரர்களின் திறமை குறித்து அவர் மேலும் பேசுகையில், “நிதிஷ் ரெட்டியை விட ரிங்கு சிங் சிறந்த பினிஷர், ஆனால் நமன் தீரிடம் சிக்ஸர்கள் அடிக்கும் திறன் உள்ளது. ஆம், சில நேரங்களில் அவர் எளிதாக விக்கெட் இழக்க நேரிடுகிறது, ஆனால் இதுபோன்ற இன்னிங்ஸ்களை விளையாடி போட்டிகளை வெல்லும் திறன் அவரிடம் உள்ளது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

​ரிங்கு சிங் மற்றும் அணியின் வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் குறித்து அவர் பேசுகையில், “ரிங்கு சிங் இன்னும் அணியில் இருக்க வேண்டும் என்றே நான் உணர்கிறேன். அவர் மீண்டும் மீண்டும் தன்னை நிருபித்துள்ளார். இந்திய அணிக்காகச் சிறப்பாகச் செயல்பட்டு போட்டிகளை வென்று கொடுத்துள்ளார். 15 பேர் கொண்ட ஸ்குவாடில் அவருக்கு இடம் கிடைக்காதது துரதிர்ஷ்டவசமானது. அயர்லாந்து மற்றும் இங்கிலாந்திடம் நாம் தோல்வியடைந்தோம். நியூசிலாந்தின் சூழ்நிலைகள் எளிதானவை அல்ல, இந்த வெற்றி பெரிய உத்வேகத்தைத் தரும்” என்று கூறி இருக்கிறார் என முடித்துள்ளார்.

- Advertisement -