புவனேஸ்வர் குமார் மேல ஒட்டு மொத்த பழியையும் போட்டாங்க.. அத வச்சு அப்ப எல்லாரும் தப்பிச்சுட்டாங்க – முகமது கைப் குற்றச்சாட்டு

0
0

​இந்திய அணியின் அனுபவமிக்க ஃபாஸ்ட் பவுலர் புவனேஸ்வர் குமார் நடத்தப்பட்ட விதம் குறித்து முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் அதிருப்தி தெரிவித்து பேசியுள்ளார். நியூசிலாந்து தொடருக்கான டி20 அணியில் அவர் மீண்டும் சேர்க்கப்பட்ட நிலையில், மழை காரணமாக அவரது கம்பேக் மேட்ச் தடைபட்டது. இந்த சூழலில் புவனேஸ்வர் குமாரை முன்னணி பவுலர் ஜஸ்பிரித் பும்ராவுடன் கைஃப் ஒப்பிட்டுப் பேசியுள்ளார்.

​புவனேஸ்வர் குமார் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகிய இருவருமே வெவ்வேறு விதமான பவுலிங் ஸ்டைல் கொண்டவர்கள் ஆவர். பும்ரா தனது விசித்திரமான ஆக்ஷன், அதிக வேகம், கூர்மையான பவுன்ஸ் மற்றும் யார்க்கர் மூலம் பவர் பிளே, மிடில் ஓவர்கள் மற்றும் டெத் ஓவர்களில் தாக்கத்தை ஏற்படுத்துவார். மறுபுறம் புவனேஸ்வர் குமார் ஸ்மூத் ஆக்ஷன், சிறந்த கன்ட்ரோல் மற்றும் புதிய பந்தை இருபுறமும் ஸ்விங் செய்யும் திறமை கொண்டவர்.

- Advertisement -

​பவர் பிளே ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்துவதே புவனேஸ்வர் குமாரின் பலமாகும். அதேசமயம் டெத் ஓவர்களில் ஸ்லோயர் பால்கள், நக்கிள் பால்கள் மற்றும் வைட் யார்க்கர்களைப் பயன்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுப்பார். உலகக்கோப்பை தொடர்களில் இந்தியா அடைந்த தோல்விகளுக்குப் பிறகு புவனேஸ்வர் குமார் மீது மட்டுமே தேவையில்லாமல் பழி சுமத்தப்பட்டதாக கைஃப் சுட்டிக்காட்டியுள்ளார்.

​இதுகுறித்து முகமது கைஃப் பேசும்போது “புவனேஸ்வர் குமார் மிகவும் உறுதியான மற்றும் எளிமையான நபர், அவர் எந்த ஆடம்பரத்தையும் காட்ட மாட்டார். அவரது டி20 எகனாமி ரேட் ஜஸ்பிரித் பும்ராவின் எகனாமி ரேட்டிற்கு இணையான ஒன்றாகும், மேலும் இருவரின் ஒட்டுமொத்த புள்ளிவிவரங்களும் மிகவும் நெருக்கமாகவே உள்ளன.” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

​மேலும் தொடர்ந்து பேசும்போது “புவனேஸ்வர் குமார் அணியில் இருந்து நீக்கப்பட்டபோது கூட அவரது பெர்ஃபார்மன்ஸ் மோசமாக இல்லை, அவரது ரெக்கார்ட் நன்றாகவே இருந்தது. ஆனால் 2021 டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானிடம் 10 விக்கெட் வித்தியாசத்திலும், 2022 உலகக்கோப்பை செமி பைனலில் ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் ஓவலில் இங்கிலாந்திடம் 10 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா தோற்றபோது, மொத்த பழியும் புவனேஸ்வர் மீது போடப்பட்டது. ஆனால் அவர் மோசமாக பவுலிங் செய்யவில்லை, நமது பேட்டர்களும் அந்த போட்டிகளில் பெரிய ஸ்கோர் அடிக்கத் தவறிவிட்டனர்.” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -