தற்போது இந்திய உள்நாட்டு டெஸ்ட் தொடரான ரஞ்சி டிராபி நடைபெற்று வருகிறது. இதில் பஞ்சாப் மாநில அணிக்காக களம் இறங்கிய இந்திய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில் ஏமாற்றம் கொடுத்திருக்கிறார்.
இந்திய அணி அடுத்த மாதத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிராக அவர்களது மண்ணில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்திய அணி அடுத்த விளையாட இருக்கும் 7 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.
இந்த நிலையில் இந்த தொடருக்கு தயாராகும் விதமாக உள்நாட்டு டெஸ்ட் தொடரான ரஞ்சி டிராபியில் சுப்மன் வில் பஞ்சாப் அணிக்காக சண்டிகர் அணிக்கு எதிரான போட்டியில் இன்று காலம் இறங்கினார். நான்காவது வரிசையில் ஆடிய அவர் ஒரு ரன் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார்.
அதே சமயத்தில் பஞ்சாப் அணிக்காக உதய் சகரன் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். இன்னொரு பக்கம் டெல்லி வீரரான அதிரடி ஆட்டக்காரர் பிரியன்ஸ் ஆர்யா 223 பந்தில் 199 ரன்கள் எடுத்து இரட்டை சதத்தை தவறவிட்டிருக்கிறார்.
நியூசிலாந்து தொடருக்கு தயாராக சுப்மன் கில் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். குறிப்பாக நியூசிலாந்துக்கு தனிப்பட்ட முறையில் நான்கு பவுலர்களை அவர் கூட்டி செல்வது குறிப்பிடத்தக்கது. ஆனால் ரஞ்சி டிராபியில் ஒரு ரன்னில் அவர் ஆட்டம் இழந்தது ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.






