வேர்ல்ட் T20 கான்டினென்ட் கப் தொடரில் தனது அனுமதி இல்லாமல் பெயரை பயன்படுத்திய அமைப்பாளர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்போவதாக இந்திய அணியின் முன்னாள் ஓப்பனர் ஷிகர் தவான் எச்சரித்துள்ளார்.
ஓய்வுபெற்ற 49 கிரிக்கெட் பிளேயர்கள் பங்கேற்கும் வேர்ல்ட் T20 கான்டினென்ட் கப் முதலாவது எடிஷன் தொடரின் ஆசியா வாரியர்ஸ் ஸ்குவாடில் ஷிகர் தவான் பெயர் சேர்க்கப்பட்டு அறிவிப்பு வெளியானது. இந்த தொடரில் பாகிஸ்தான் பிளேயர்களும் இடம்பெற்றுள்ள நிலையில், தனது அனுமதி பெறாமல் பெயரை சேர்த்த அமைப்பாளர்களுக்கு எதிராக தவான் தற்போது களமிறங்கியுள்ளார்.
சமூக வலைதளத்தில் தனது நிலைப்பாடு குறித்து ஷிகர் தவான் பதிவிட்டுள்ளதாவது “வேர்ல்ட் T20 கான்டினென்ட் கப் தொடரில் நான் ஒரு பிளேயராக பங்கேற்பதாக என் பெயர் இடம்பெற்றிருப்பதை பார்த்தேன்” என்று கூறி இருக்கிறார்.
தொடர்ந்து அந்த பதிவில் தவான் பேசும்போது “எனக்கு தெரியாமலும் எனது அனுமதி இல்லாமலும் அமைப்பாளர்கள் எனது பெயரை பயன்படுத்தியுள்ளனர், இதற்கு தீர்வு காண எனது டீம் தகுந்த சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்கும்” என்று கூறி இருக்கிறார்.
மேலும் அவர் பேசும்போது “மீடியாக்கள் மற்றும் எனது ஃபேன்ஸ் அதிகாரப்பூர்வமற்ற எந்தவொரு அறிவிப்புகளையும் செய்தியாக வெளியிடவோ அல்லது நம்பவோ வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். உங்களுடைய தொடர்ச்சியான அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி” என கூறி முடித்துள்ளார்.






