இந்தியா வந்தால் இந்த ரெண்டு பிரச்சினையை தாண்டினால் தான் ஜெயிக்க முடியும்.. எங்க தோல்விக்கு காரணம் இதுதான் – ஷாய் ஹோப் பேட்டி

0
1

​இந்திய அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஷாய் ஹோப் போட்டிக்குப் பிறகு அணியின் பேட்டிங் மற்றும் பௌலிங் திட்டங்கள் குறித்துப் பகிர்ந்துகொண்டார்.

​இதுகுறித்து ஷாய் ஹோப் பேசும்போது “உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், விளையாட்டின் பல பகுதிகளை நீங்கள் சுட்டிக்காட்டலாம். ஆனால் போட்டியின் பேக் எண்டில் நாங்கள் போதுமான ரன்களை எடுக்கவில்லை என்றுதான் தோன்றுகிறது. பேட்டிங்கில் நாங்கள் கொஞ்சம் அதிகமாகக் கேயாட்டிக்காக இருந்ததாக நினைக்கிறேன். விளையாடுவதில் நாங்கள் மிகவும் அக்ரசிவ் ஆக இருந்தோம். ஆனால் இந்தியாவில் விளையாடும் போது, நீங்கள் போர்டில் நல்ல ரன்களை சேர்க்க வேண்டும். அவுட்ஃபீல்டில் இருக்கும் வெட்னஸ் மற்றும் பௌலிங் செய்யும் போது சர்பேஸ் சற்று சிறப்பாக மாறுவதால், உங்களுக்குக் கூடுதலாக 20 அல்லது 30 ரன்கள் குஷன் இருக்க வேண்டும்” என்று தொடங்கினார்.

- Advertisement -

​தொடர்ந்து பேசிய அவர் “சில சமயங்களில் பௌலிங் செய்வதற்கு இன்னும் சில ஆல்ரவுண்டர்கள், சில வித்தியாசமான ஆப்ஷன்கள் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புவீர்கள். இருப்பினும் இன்று நாங்கள் களமிறக்கிய காம்பினேஷன் இதுதான். வீரர்கள் தங்களின் ஸ்கில் செட் எதுவாக இருந்தாலும் அதைச் சரியாக எக்ஸிகியூட் செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால் இன்று இந்தியாவிற்கு எதிராக வெற்றி பெற எங்களிடம் போதுமான ரன்கள் இல்லை. நான் சொன்னது போல், இலக்கை செட் செய்யும்போது இங்கு எப்போதும் கடினமாகவே இருக்கும்” என்று கூறினார்.

​மேலும் பேசிய அவர் “ஐடியலாக ஸ்பின்னர்கள் தலா எட்டு ஓவர்கள் வீச வேண்டும் என்று நான் விரும்புவேன். அந்த நேரத்தில் எங்கள் அணியில் இரண்டு ஸ்பின்னர்கள் மட்டுமே இருந்தனர். சில விக்கெட்டுகளை எடுத்தால், பேக் எண்டில் இன்னும் சில லெஃப்ட் ஹேண்டர்கள் இருக்கும்போது சேஸ் உள்ளே வந்து சேதம் விளைவிக்கலாம் என்று நினைத்தோம். ஆனால் இன்று அது எங்களுக்குச் சரியாக வரவில்லை. ஒரு எக்ஸ்ட்ரா ஸ்பின்னர் இருந்திருக்கலாம் என ஹைண்ட்சைட்டில் பல விஷயங்களைப் பார்க்கலாம். ஆனால் இந்தியா நன்றாக விளையாடியது, இன்று எங்களை விட அவர்கள் சிறப்பாகச் செயல்பட்டார்கள்” என்று தெரிவித்தார்.

- Advertisement -

​அவர் நிறைவாகப் பேசுகையில் “இந்தியாவில் பேட்டிங் செய்வதை நான் மிகவும் விரும்புகிறேன். எனவே இங்கு வந்து கிரிக்கெட் விளையாட வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அது எனக்கு எப்போதும் மகிழ்ச்சியளிக்கிறது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -