சேட்டை புடிச்ச பையன் சார் விராட் கோலி.. பும்ராவை இப்படி சொல்லி கிண்டல் பண்ணுவாரு – அஸ்வின் சுவாரசியம்

0
0

விராட் கோலியின் வேடிக்கையான குணத்தைப் பற்றி அஸ்வின் சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். பயிற்சியின்போது இருவரும் வலைக்கு பின்னால் நின்று கொண்டிருக்கும்போது, விராட் கோலி சக வீரர்களை கவனித்து அவர்களைப் போலவே நடித்து காட்டுவாராம். குறிப்பாக ஒருவர் ஏதாவது செய்வதை பார்த்தால், அதை அப்படியே இமிடேட் செய்து வேடிக்கையாக கலாய்ப்பது விராட்டின் வழக்கம் என்றும் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

கொரோனா காலத்தில் இருவரும் பபுளில் அதிக நேரம் ஒன்றாக இருந்ததாகவும், அந்த காலகட்டத்தில்தான் தங்களுடைய உறவு மேலும் நெருக்கமானதாக மாறியதாகவும் அஸ்வின் கூறியுள்ளார். கொரோனாவுக்குப் பிறகு ஒரு நபராக தான் நிறைய மாறியதாகவும், அதன் காரணமாக விராட்டுடனான தனது உறவும் மேலும் சிறப்பானதாக மாறியதாகவும் அஸ்வின் தெரிவித்துள்ளார். இருவரும் நிறைய நேரம் ஒன்றாக செலவிட்டு நிறைய பேசியதாகவும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அஸ்வின் கூறும்போது, “பயிற்சியின்போது நானும் விராட்டும் வலைக்கு பின்னால் நின்று கொண்டிருக்கும்போது, ‘பும்ராவின் கைகள் எப்படி செல்கிறது அல்லது அவர் எப்படி நடக்கிறார் என்று பாருங்கள்’ என்று விராட் வேடிக்கையாக கூறுவார். விராட் நிறைய பேரை இமிடேட் செய்வார். நீங்கள் ஏதாவது செய்வதை அவர் பார்த்தால், அதை அப்படியே செய்து காட்டுவார். அவர் அதை நிறைய செய்வார், வேடிக்கைக்காக நிறைய ட்ரோல் செய்வார். விராட்டின் அந்த குணத்தை நான் மிகவும் விரும்புகிறேன். கொரோனா காலத்தில் நாங்கள் பபுளில் நிறைய நேரம் ஒன்றாக இருந்தோம். அப்போதுதான் எங்களுடைய உறவு சிறப்பானது. கொரோனாவுக்குப் பிறகு ஒரு நபராக நான் நிறைய மாறினேன். அதனால் விராட்டுடனான என்னுடைய உறவும் சிறப்பானது. நாங்கள் நிறைய நேரம் ஒன்றாக செலவிட்டு நிறைய பேசினோம்” என்று கூறியுள்ளார்.

- Advertisement -