20 வருஷமா இந்தியா கிட்ட எங்களால முடியல.. ஆனா இத வச்சுதான் தோற்கடிக்க போறோம் – ஷாய் ஹோப் நம்பிக்கை

0
0

​இந்தியாவிற்கு எதிராக நடைபெறவிருக்கும் ஓடிஐ தொடரில் இந்திய அணியை அவர்களின் சொந்த மண்ணில் எதிர்கொள்வது ஒரு சிறந்த சவாலாக இருக்கும் என வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அனுபவ வீரர்களும் இளம் வீரர்களும் நிறைந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்தியாவில் நீண்ட நாட்களாக தொடரை வெல்லாத வரலாற்றை மாற்றி அமைக்கும் நோக்கில் களமிறங்குகிறது.

​இந்தியாவில் உள்ள ஆடுகளங்களின் சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டு பேட்டிங் மற்றும் பௌலிங் செய்வது மிகவும் முக்கியமாகும். குறிப்பாக ரோஸ்டன் சேஸ் மற்றும் குடகேஷ் மோடி போன்ற அனுபவம் வாய்ந்த ஸ்பின்னர்கள் இந்த தொடரில் அணிக்கு பெரும் பலமாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

​மேலும் 2002 ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்திய மண்ணில் ஓடிஐ தொடரை வெல்லாத வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு, இந்த வரலாற்றுப் புள்ளிவிவரமே கூடுதல் ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது. இளம் வீரர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களது திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்று அணி நிர்வாகம் விரும்புகிறது.

​இதுகுறித்து வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் பேசும்போது, “இந்தியாவை அவர்களின் சொந்த மண்ணில் எதிர்கொள்வது எப்போதுமே ஒரு பெரிய சவாலாகும். அதை நாம் கட்டாயம் ஏற்றுக்கொண்டு சிறப்பாக விளையாட வேண்டும். சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும்போது உலகின் சிறந்த அணிக்கு எதிராக அவர்களின் சொந்த சூழலில் விளையாடுவதுதான் உண்மையான டெஸ்ட் ஆகும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

​மேலும் தனது பேட்டிங் மற்றும் தொடர் குறித்து பேசும்போது, “ஒவ்வொரு நாளும் நமது நாளாக இருக்காது. ஆனால் ரன்கள் அடிக்க நுட்பமான விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். இந்தியாவிற்கு எதிராக 20 ஆண்டுகளாக தொடரை வெல்லவில்லை என்ற புள்ளிவிவரம் எங்களுக்கு கூடுதல் மோடிவேஷன் தருகிறது” என்று கூறி முடித்திருக்கிறார்.

- Advertisement -