என்னுடைய பேட்டிங் ஸ்டைலை இப்படி மாற்றி விட்டேன்.. இனி நான் ஆடப் போகும் முறை இதுதான் – விராட் கோலி உற்சாகம்

0
0

​வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் நட்சத்திர பேட்டர் விராட் கோலி தனது புதிய பேட்டிங் அணுகுமுறை மற்றும் இலக்கு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

​சமீபகாலமாக போட்டிகளில் அதிக ஸ்ட்ரைக் ரேட் உடன் விளையாடி வரும் விராட் கோலி, மக்களின் எதிர்பார்ப்புகளை பற்றி கவலைப்படாமல் சுதந்திரமாக விளையாடுவதே தனது தற்போதைய பாணி என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

​நீண்ட காலமாக அணியின் இன்னிங்ஸை ஸ்டேபிலைஸ் செய்யும் ரோல் தனக்கு வழங்கப்பட்டிருந்தாலும், தற்போதைய நவீன கிரிக்கெட் சூழலுக்கு ஏற்ப அதிக ரன்களை குவிக்கும் நோக்கத்துடன் தாம் ரிஸ்க் எடுத்து விளையாட தயாராகி விட்டதாக அவர் கூறியுள்ளார்.

​இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இதுகுறித்து பேசும்போது “முதலாவதாக நான் மேலும் ஃப்ரீயாக விளையாட வேண்டும் என்று எனக்கு நானே வாக்குறுதி அளித்துக் கொண்டேன். என்னைச் சுற்றி மக்கள் வைத்திருக்கும் எதிர்பார்ப்புகளைப் பற்றி நான் கவலைப்படப் போவதில்லை. நீண்ட காலமாக எனது ரோல் இன்னிங்ஸை ஸ்டேபிலைஸ் செய்வதாகவே இருந்தது. என்னால் ஷாட்ஸ் அடிக்க முடியும் என்று எனக்குத் தெரியும், ஆனால் கடினமான சூழ்நிலையிலும் பிட்சிலும் விளையாடும்போது, அடிக்க முடிந்தாலும் நமக்கு கொடுக்கப்பட்ட ரோல் நினைவுக்கு வந்துவிடும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

​மேலும் தொடர்ந்து பேசிய அவர் “போட்டியில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் கான்ஷியஸாக முயற்சி செய்து வருகிறேன். பிற அணிகள் 340 முதல் 350 ரன்களை இலக்காக வைக்கும்போது, நம்மாலும் 350 முதல் 360 ரன்கள் வரை எடுக்க முடியும். நான் தற்போது ரிஸ்க் எடுக்க முற்றிலும் தயார், ஏனெனில் நான் அங்கு ரன்கள் எடுத்தால் நம்மால் எளிதாக 350 முதல் 360 ரன்களை எட்ட முடியும், மேலும் நீண்ட நேரம் களத்தில் இருந்தால் இறுதியில் இன்னும் அதிகமாக ஹிட் செய்ய முடியும்” என்று கூறி முடித்துள்ளார்.

- Advertisement -