மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டிக்கு முன்பாக, இளம் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைப்பது கடினம் என்பதை இந்திய அணி பேட்டிங் பயிற்சியாளர் கூறியிருக்கிறார்.
இந்திய மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கேரளாவில் நடைபெறவுள்ள நிலையில், அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடாக் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்பொழுது, ரோகித் சர்மா மற்றும் கேப்டன் சுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாகக் களமிறங்குவதால் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது வாய்ப்புக்காகக் காத்திருக்க வேண்டும் என்று அவர் வெளிப்படையாகத் தெரிவித்தார்.
இது குறித்து இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடாக் பேசும்போது “அணியில் இடம்பிடிக்க கடும் காம்படீஷன் நிலவுகிறது, மேலும் பல பிளேயர்கள் தொடர்ந்து சிறப்பான பெர்ஃபார்மன்ஸ் கொடுத்து வருகிறார்கள். ஜெய்ஸ்வால் சிறந்த பேட்டர்களில் ஒருவர் என்பதும், அவருக்கு ஆப்பர்சூனிட்டி கிடைக்கும்போதெல்லாம் அவர் தனது திறமையை நிரூபித்துள்ளார் என்பதும் நாம் அனைவரும் அறிந்ததே. எனவே அவர் அணியின் ஒரு முக்கிய பார்ட் ஆக இருக்கிறார். சப்போர்ட் ஸ்டாஃப் ஆக நாங்கள் அவரது ஸ்கில்ஸ், பிராக்டீஸ் மற்றும் மைண்ட்செட் ஆகியவற்றைக் கவனிக்கிறோம், மேலும் கௌதம் கம்பீரும் அவருடன் தொடர்ந்து பேசி வருகிறார்” என்று கூறி இருக்கிறார்.
மேலும் தொடர்ந்து பேசிய சிதான்ஷு கோடாக் “ஆனால் சில நேரங்களில் நீங்கள் பார்க்கும்போது, உதாரணத்திற்கு மூன்று மிகச்சிறந்த விக்கெட் கீப்பர்கள் இருந்தால், அவர்களில் ஒருவரால் மட்டுமே ஆடும் லெவனில் விளையாட முடியும். அதனால் அவருக்கு அநீதி இழைக்கப்படுவதாக அர்த்தமில்லை. அவர் தொடர்ந்து ஹார்ட் வொர்க் செய்து, தனது ஆப்பர்சூனிட்டிக்காக வெயிட் பண்ண வேண்டும். இதுவரை அவருக்கு வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் அவர் சிறப்பாகவே பெர்ஃபார்ம் செய்துள்ளார்” என்று கூறி இருக்கிறார்.






