எனக்கு 2027 உலக கோப்பைதான் கடைசி.. இந்த காரணத்தால் ஈசியா இருக்காது – விராட் கோலி ஓபன் பேட்டி

0
0

​வரும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக கோப்பையை வெல்வதற்காகத் தான் ஆற்ற வேண்டிய தீவிரமான பங்களிப்பு மற்றும் மன உறுதி குறித்து விராட் கோலி கூறியிருக்கிறார்.

​இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்டரான விராட் கோலி தனது கிரிக்கெட் கரியரில் பல சாதனைகளைப் படைத்திருந்தாலும், வரவிருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பையை வெல்வதையே தனது முதன்மை இலக்காகக் கொண்டு தீவிரமாகப் பயிற்சி பெற்று வருகிறார்.

- Advertisement -

​முன்னாள் கேப்டன் விராட் கோலி தனது எதிர்கால உலகக் கோப்பை திட்டம் குறித்து பேசும்போது “50 ஓவர் வேர்ல்ட் கப் தொடரின் இன்டென்சிட்டி மிகவும் அதிகமாக இருக்கும். இப்போது டி20 லெவல் இன்டென்சிட்டியுடன் 10 மேட்ச்கள் விளையாட வேண்டி இருக்கிறது. ஆனால் ஒரே நாளில் 2.5 டி20 மேட்ச்கள் விளையாடுவதற்கு சமமான உழைப்பு தேவைப்படும். ஒரு பெரிய தொடரிலும் வேர்ல்ட் கப் போட்டிகளிலும் 10 மேட்ச்களுக்கு அந்த இன்டென்சிட்டியை மெயின்டெய்ன் செய்வது மிகப்பெரிய விஷயம். அதிலும் இப்போது வெளிநாட்டு கண்டிஷன்ஸில் நடக்கிறது. அது உங்களிடம் இருந்து அதிக உழைப்பைக் கோரும்” என்று கூறி இருக்கிறார்.

​தொடர்ந்து பேசிய விராட் கோலி தனது இலக்கு பற்றி பேசும்போது “என்னைப் பொறுத்தவரை இது இந்தியாவிற்காக நான் விளையாடப்போகும் கடைசி வேர்ல்ட் கப். அதுவே எனக்கு மிகப்பெரிய மோட்டிவேஷன். என்னுடைய அனைத்தையும் களத்தில் இறக்கப் போகிறேன். நிச்சயமாக வேர்ல்ட் கப் வெல்வதே இலக்கு, அதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதற்கு நான் முற்றிலும் தயார்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
- Advertisement -