ரோஹித்துடன் கருத்து வேறுபாடு வந்தாலும்… கம்பீர் சொன்ன அந்த முக்கிய விஷயம்.. ரசிகர்கள் மகிழ்ச்சி

0
1

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், ரோஹித் சர்மாவுடனான தனது உறவு குறித்து தற்போது சுவாரஸ்யமான விஷயத்தை தெரிவித்துள்ளார். பொதுவாக ஒரு பயிற்சியாளரும் கேப்டனும் இணைந்து செயல்படும்போது, அணியின் திட்டங்கள் மற்றும் முடிவுகளை மையமாக வைத்துதான் அவர்களுடைய உறவு உருவாகும். ஆனால் ரோஹித் விஷயத்தில் அப்படி இல்லை என்றும், அவர் இந்திய அணிக்கு வந்த காலத்திலிருந்தே ரோஹித்தை தனக்கு தெரியும் என்றும் கம்பீர் கூறியுள்ளார். அப்போது கம்பீர் இந்திய அணியின் சீனியர் வீரராக இருந்ததால், இருவருக்கும் பல ஆண்டுகளாக இருந்த பழக்கமும் புரிதலும் பின்னர் கேப்டன்–பயிற்சியாளர் கூட்டணிக்கும் உதவியதாக அவர் தெரிவித்துள்ளார்.

கம்பீரின் கூற்றுப்படி, ரோஹித்தும் தனது சிந்தனையை நன்றாக புரிந்து வைத்திருப்பதாகவும், அதேபோல் ரோஹித் எப்படி சிந்திப்பார் என்பது தனக்கும் தெரியும் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் ஒரு விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும், அது அணிக்குள் பெரிய பிரச்சனையாக மாற வேண்டிய அவசியம் இல்லை என்பதே கம்பீர் கூறியுள்ள கருத்தின் முக்கிய அம்சமாக உள்ளது. கேப்டனுக்கும் பயிற்சியாளருக்கும் வெவ்வேறு கருத்துகள் இருப்பது இயல்பானது என்றும், இறுதியில் இந்திய அணிக்கு எது சிறந்ததோ அந்த முடிவை எடுப்பதே முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

இது குறித்து கம்பீர் கூறும் போது “ரோஹித்துக்கும் எனக்கும் இருந்த உறவு வெறும் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் உறவு மட்டுமல்ல. ரோஹித் அணிக்கு வந்தபோது நான் சீனியர் வீரராக இருந்தேன். அப்போதிலிருந்தே எங்களுடைய உறவு இருக்கிறது. அவர் எனது சிந்தனையை அறிந்திருக்கிறார், நானும் அவரது சிந்தனையை அறிந்திருக்கிறேன். நாளை எங்களுடைய இருவருக்கும் வெவ்வேறு கருத்துகள் இருக்கலாம். ஆனால் இறுதியில் அணியின் நலனுக்காக எடுக்கப்படும் முடிவுதான் முக்கியம். அதைவிட சிறந்த விஷயம் எதுவும் இருக்க முடியாது,” என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -