என் கிரிக்கெட் வாழ்க்கை அப்பவே முடிஞ்சிடுச்சினு தெரியும்.. இந்திய அணியில் இனி வாய்ப்பிருக்கா? – புவனேஸ்வர் குமார் வெளிப்படை பேச்சு

0
1

​இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்பர் குமார் 2022 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பது குறித்தும் தனது எதிர்கால திட்டங்கள் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார்.

​கடந்த 2022 டி20 வேர்ல்ட் கப் தொடருக்கு பிறகு தனக்கு இந்திய டீமில் மீண்டும் வாய்ப்பு கிடைப்பது கஷ்டம் என்பதை அவர் உணர்ந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

- Advertisement -

​அத்துடன் தனக்கு மீண்டும் இந்திய டீமில் விளையாட விருப்பம் இருந்தாலும் அதற்காக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இயல்பாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

​இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பது குறித்து புவனேஷ்பர் குமார் பேசும்போது “2022 அடிலெய்ட் மேட்ச் முடிந்த பிறகு டிரஸ்ஸிங் ரூமுக்கு வந்து எனது மனைவி நூபூரிடம் இதுதான் எனது கடைசி வேர்ல்ட் கப் என்று தோன்றுகிறது என கூறினேன். ஒரு பெரிய டோர்னமெண்ட்டில் தோற்ற பிறகு தேர்வாளர்கள் ஃபியூச்சர் பற்றி யோசிப்பார்கள் என்பதால் அனுபவத்தின் அடிப்படையில் அப்படி சொன்னேன். அதன் பிறகு சில தொடர்களுக்கு எனக்கு கால் பேக் கிடைக்கும் என நினைத்தேன். மேனேஜ்மெண்ட் தரப்பிலும் பேசினார்கள் ஆனால் அது நடக்கவில்லை. நான் இந்திய டீம் ஆட விரும்பினாலும் அதற்காக காத்திருக்கவில்லை” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

​மேலும் 2019 மற்றும் 2022 வேர்ல்ட் கப் தோல்விகள் குறித்து பேசும்போது “2022 அரையிறுதியை விட 2019 வேர்ல்ட் கப் அரையிறுதி தோல்விதான் எனக்கு ரொம்பவே ஹார்ட் பிரேக்கிங் ஆக இருந்தது. ஏனெனில் 2019 போட்டியில் சிறிய டார்கெட் என்பதால் அனைவருமே நாங்கள் ஜெயிப்போம் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் டி20 போட்டியில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -