ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை தொடர்ந்து ‘பிளேயர் ஆஃப் தி மேட்ச்’ விருது வென்ற அபிஷேக் சர்மா தனது ஃபீல்டிங் அனுபவம், நெட்ஸ் பயிற்சி மற்றும் அணியின் பேட்டிங் அப்ரோச் குறித்து விரிவாகப் பாராட்டி பேசி இருக்கிறார்.
இந்த போட்டியில் இந்திய அணி ஆப்கானிஸ்தானை 156 ரன்களுக்குள் கட்டுப்படுத்திய நிலையில், சேசிங்கின் போது தொடக்க ஆட்டக்காரர்கள் அதிரடியான ஸ்டார்ட் அமைத்துக் கொடுத்ததால் 13.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.
முதல் ஓவரிலேயே ஸ்லிப்பில் கிடைத்த கேட்ச் தனக்கு கூடுதல் கான்ஃபிடன்ஸ் கொடுத்ததாகவும், நெட்ஸ் பயிற்சியின் போது ஜஸ்ப்ரீத் பும்ராவை எதிர்கொள்வது டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் சில ஓவர்களை விளையாடுவது போல் சவாலாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அபிஷேக் சர்மா பேசும்போது “முதல் ஓவரிலேயே அதுவும் ஸ்லிப்பில் கேட்ச் பிடிப்பது கூடுதல் கான்ஃபிடன்ஸ் அளிக்கிறது. இன்று இன்னிங்ஸை அப்படித் தொடங்கியதில் மிகவும் மகிழ்ச்சி. நெட்ஸில் பும்ராவை எதிர்கொள்ளும் போது டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் சில ஓவர்களை ஆடுவது போல் இருக்கும். அதனால் ஸ்லிப்பில் நிற்கும்போதும் நாங்கள் எப்போதும் ஆன் அவர் டோஸில் கவனமாக இருப்போம்” என்று கூறி இருக்கிறார்.
மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில் “இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே உலகக்கோப்பைக்கு முன் அனைத்து அணிகளையும் டாமினேட் செய்து விளையாட வேண்டும் என்று முடிவு செய்தோம். ஒன்று அல்லது இரண்டு சீரிஸ்கள் நமது பேட்டிங் யூனிட்டை தீர்மானிக்க முடியாது, ஏனெனில் நாங்கள் எப்போதும் டீம் ஃபர்ஸ்ட் என்ற எண்ணத்தோடுதான் யோசிக்கிறோம். 150, 160 போன்ற ரன்களை சேஸ் செய்யும்போது ஓப்பனர்களாக நல்ல ஸ்டார்ட் கொடுத்தால் அது எப்போதும் வெற்றிப் பாதையில் கொண்டு சேர்க்கும்” என்று கூறி முடித்தார்.






