எங்க டீமோட சொத்து இவரு.. நேத்து இவர் ஆரம்பிச்சு வச்சதுதான் எல்லாமே – கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேச்சு

0
12

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதை தொடர்ந்து கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அணியின் பவுலிங் யூனிட் மற்றும் பேட்டர்களின் சிறப்பான பெர்பார்மன்ஸ் குறித்து விரிவாகப் பாராட்டி பேசி இருக்கிறார்.

​இந்த போட்டியில் இந்திய அணியின் பவுலர்கள் ஆப்கானிஸ்தான் அணியை 156 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினர். பின்னர் களம் இறங்கிய இந்திய அணி 13.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

​அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோரின் அதிரடி பேட்டிங் ஆட்டத்தை இந்திய அணியின் பக்கம் எளிதாக திருப்பியது. கடைசி ஓவரில் சிவம் துபே பவுலிங் செய்தது குறித்து எழுந்த கேள்விகளுக்கும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தனது விளக்கத்தை அளித்துள்ளார்.

​இதுகுறித்து ஸ்ரேயாஸ் ஐயர் பேசும்போது “நிச்சயமாக இந்த வெற்றியால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் வெற்றி பெற இணைந்து உழைத்தனர். பும்ரா அணிக்கு கிடைத்த மிகப்பெரிய அசெட், அவர் நல்ல ஸ்டார்ட் அமைத்து மற்ற பவுலர்களுக்கு மொமண்டம் உருவாக்கினார். அர்ஷ்தீப் சிறப்பாக பவுலிங் செய்தார், அவரைத் தொடர்ந்து அக்சர் மற்றும் வருண் பவுலிங் செய்த விதம் ஃபினாமினல் எஃப்பர்ட்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

​மேலும் அவர் பேசும்போது “கடைசி ஓவரை துபே வீசியபோது வேறு ஆப்ஷன் இல்லை. 20வது ஓவரில் பவுலிங் செய்ய வரும்போது விக்கெட் பேஸ் எப்படி இருக்கும், பால் எப்படி போகும் என்பதை கணிக்க முடியாமல் போவது இயல்புதான். இருந்தாலும் கிரிக்கெட்டில் இதெல்லாம் சகஜம், அவர் எந்த ஏரியாவில் வொர்க் அவுட் செய்ய வேண்டும் என அனலைஸ் செய்வார். அபிஷேக் ஆடிய ஷாட்கள் ப்ளாலெஸ்ஸாகவும் எக்ஸெம்ப்ளரியாகவும் இருந்தது. இஷான் கிஷன் தற்போது கிரேட் ஃபார்மில் இருக்கிறார். டிரஸ்ஸிங் ரூமிலும் பிராக்டிஸ் செஷனிலும் அவர் ரிலாக்ஸ்டாகவும் காமாகவும் இருக்கிறார், தனது கேம் என்னவென்று அவருக்கு நன்றாகத் தெரியும். இது அணிக்கு ஒரு நல்ல சைன்” என்று கூறி முடித்தார்.
​

- Advertisement -