இந்திய டீம்ல இருந்து வெளியே அனுப்பினாங்க.. அப்ப என் மைண்ட்ல இந்த மாற்றம் நடந்துச்சு – இஷான் கிஷான் பேட்டி

0
0

​துலீப் டிராபி ஃபைனல் மேட்ச்சில் ஈஸ்ட் ஜோன் கேப்டன் இஷான் கிஷன் 270 ரன்கள் குவித்து அசத்தியதை தொடர்ந்து, இந்திய டெஸ்ட் டீமில் அவர் மீண்டும் இடம் பிடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

​இந்திய கிரிக்கெட் டீமில் இருந்து விலகி இருந்த காலகட்டத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள், தனது மைண்ட்செட்டை முற்றிலுமாக மாற்றி அமைத்து விட்டதாக இடதுகை பேட்ஸ்மேன் இஷான் கிஷன் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

​இந்திய டீமில் இடம் பிடிப்பதற்காக டொமஸ்டிக் கிரிக்கெட்டில் தொடர்ந்து கடுமையாக உழைத்து ரன்கள் குவிப்பதே தனது ஒரே இலக்கு என்றும், மற்ற விஷயங்களை பற்றி யோசித்து தேவையற்ற பிரஷரை ஏற்படுத்திக் கொள்ள விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

​தற்போது தனது பார்ம் குறித்து இஷான் கிஷன் பேசும்போது “நான் என்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று தனியாக முயற்சி செய்யவில்லை. இந்திய டீமில் இல்லாத போது, ரன்கள் அடிப்பது ஒன்றுதான் நமது ஒரே ஜாப் என்பதை உணர்ந்தேன். தேவையில்லாத எண்ணங்கள் நமது மைண்ட்செட்டை மாற்றி, ஓவர்திங்கிங் செய்து பிரஷரை அதிகமாக்கும். மேட்ச் வின் பண்ணுவது மட்டுமே முக்கியம்” என்று ஆரம்பித்து “மைண்ட்செட்டை கிளியராக வைத்திருக்கும் போது விளையாடுவது மிகவும் ஈசி” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

​மேலும் தனது கம்பேக் குறித்து பேசிய அவர் “இப்போதெல்லாம் நான் எதைப்பற்றியும் யோசிப்பதில்லை. பந்தை பார்த்து ரியாக்ட் செய்வதும், எதிர்பார்ப்புகள் இல்லாமல் ரன்கள் அடிப்பதுமே எனது வேலை. சில நேரங்களில் பேஷன்ஸ் இழக்க நேரிடும் போது, நம்மிடம் நாமே பேசி அமைதிப்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று ஆரம்பித்து “இந்திய டீமில் தொடர்ந்து விளையாடும் போது நமது குரோத் ஒரு இடத்தில் ஸ்டாக் ஆகிவிடும். மீண்டும் டொமஸ்டிக் கிரிக்கெட்டிற்கு வந்து ஜீரோவில் இருந்து ஸ்டார்ட் செய்யும் போதுதான் நமது பேட்டிங் மைண்ட்செட் மாறும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -