ஆப்கானை பார்த்து கம்பீர் அகர்கர் பயப்படுறாங்க.. அதனாலதான் இந்த மாதிரி ஒரு முடிவ எடுத்திருக்காங்க – ஸ்ரீகாந்த் விளக்கம்

0
0

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடருக்கு இந்தியத் தேர்வுத் குழு பயத்தின் காரணமாகவே அனைத்து முதன்மை வீரர்களையும் கொண்ட ஃபுல் ஸ்ட்ரென்த் ஸ்குவாடை தேர்வு செய்திருப்பதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் கடும் விமர்சனத்தை முன்வைத்து இருக்கிறார்.

​சமீபத்தில் நடந்த அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடர்களில் இந்திய அணி சந்தித்த தொடர் தோல்விகள் காரணமாகவே, புதிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்காமல் தேர்வுக்குழு இந்த முடிவை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

- Advertisement -

​ஆப்கானிஸ்தான் போன்ற அணிகளுக்கு எதிரான தொடர்களில் இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பளித்து சோதித்துப் பார்ப்பதே சரியான அணுகுமுறையாக இருக்கும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

​இதுகுறித்து ஸ்ரீகாந்த் பேசும்போது “அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடர் தோல்விகளுக்குப் பிறகு தேர்வாளர்கள் எந்த ரிஸ்க்கும் எடுக்க விரும்பாமல் அஃப்கானிஸ்தானுக்கு எதிராக ஃபுல் ஸ்ட்ரென்த் அணியைத் தேர்வு செய்துள்ளனர். இது ஒரு தவறான முடிவாகும். ஆப்கானிஸ்தான் போன்ற அணிகளுக்கு எதிராகத்தான் நீங்கள் இளம் வீரர்களைச் சோதித்துப் பார்க்க வேண்டும். ஆனால் நீங்கள் பயத்தின் காரணமாக முதன்மை அணியைத் தேர்வு செய்திருக்கிறீர்கள்.” என்று தொடங்கி இருக்கிறார்.

- Advertisement -

​தொடர்ந்து பேசிய அவர் “தோல்விகளுக்குப் பிறகான பதற்றத்தில் எடுக்கப்பட்ட முடிவாகவே இது தெரிகிறது. மேலும் காயம் அடைந்த நான்கு வீரர்கள் மேட்ச் ஃபிட்னஸை நிரூபிக்காமலேயே அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். பெங்களூரு மையத்தில் ஃபிட்னஸை நிரூபித்தால் மட்டும் போதாது, போட்டிகளில் விளையாடி ஃபிட்னஸை நிரூபிப்பதே முக்கியம். இது வீரர்களின் திறமை பற்றிய கேள்வி அல்ல, மேட்ச் ஃபிட்னஸ் இல்லாமல் ஏன் தேர்வு செய்தார்கள் என்பதுதான் கேள்வி.” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -