கம்பீர் காரணமே இல்லாமல் இந்த பையன் வாழ்க்கையில விளையாடுறார்.. இது சரி இல்ல – வாசிம் ஜாஃபர் விமர்சனம்

0
0

​இந்திய அணி அடுத்து ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடரில் 2026 டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த நட்சத்திர ஆட்டக்காரர் ரிங்கு சிங் நீக்கப்பட்டது குறித்து முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

​இந்திய அணிக்குத் திரும்பும் காயமடைந்த வீரர்களுக்கு வாய்ப்பளிப்பதற்காகவே அவர் நீக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனால் அவருக்குப் போதிய வாய்ப்புகள் கிடைக்காமல் போனது கவலையளிக்கிறது.
​இந்திய அணிக்கு அவர் விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் மிகக் முக்கியமான தருணங்களில் களமிறங்கி சிறப்பாகவே செயல்பட்டுள்ளார்.

- Advertisement -

​ரிங்கு சிங் நீக்கம் குறித்து வாசிம் ஜாஃபர் பேசும்போது “ஐபிஎல் தொடரிலும், சமீபத்தில் நடந்த உத்தரப் பிரதேச பிரீமியர் லீக் மற்றும் துலீப் டிரோபி போட்டிகளிலும் அவர் மிகச் சிறப்பாக விளையாடினார். இந்திய அணியில் அவருக்கு நிரந்தர இடம் கிடைக்காதது துரதிர்ஷ்டவசமானது. அணியில் இருக்கும் மற்ற வீரர்களை விட, எந்தவிதமான வலுவான காரணமும் இன்றி ரிங்கு சிங் அணியில் இருந்து நீக்கப்பட்டதாகவே நான் உணர்கிறேன்” என்று கூறி இருக்கிறார்.

​மேலும் தொடர்ந்து பேசிய அவர் “காயத்தில் இருந்து மீண்டு வரும் மூத்த வீரர்களுக்கு அணியில் இடம் கொடுக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது, ஆனால் ரிங்கு சிங் எந்தத் தவறும் செய்யவில்லை. அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மிகக் கடினமான சூழ்நிலைகளிலும் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தி இருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -
- Advertisement -