ஆஸ்திரேலிய அண்டர்-19 அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அண்டர்-19 அணியில் முன்னாள் வீரர்களான வீரேந்தர் சேவாக் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோரின் மகன்களான ஆர்யவீர் சேவாக் மற்றும் அன்வய் டிராவிட் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியில் மறக்க முடியாத பல வெற்றிகளைப் பெற்றுத்தந்த பெருமை சேவாக் மற்றும் டிராவிட் ஆகிய இருவருக்கும் உண்டு. இவர்கள் இருவரும் இணைந்து இந்திய அணிக்காக களமிறங்கி பல ரன் குவிப்புகளைச் செய்துள்ளனர். இவர்களது ஆட்டத்தை கிரிக்கெட் ரசிகர்கள் இப்போதும் ஆவலுடன் நினைவுகூர்ந்து வருகின்றனர்.
தற்போது அவர்களின் மகன்களும் கிரிக்கெட் உலகில் தங்கள் கால்பதித்து வளரும் வீரர்களாக தங்களை நிரூபித்து வருகின்றனர். உள்நாட்டுப் போட்டிகளில் சிறந்த பெர்பார்மன்ஸ் வெளிப்படுத்தியதன் மூலம் தேர்வாளர்களின் கவனத்தை இவர்கள் இருவருமே ஈர்த்துள்ளனர்.
இந்த நிலையில் தேர்வுக்குழு அதிகாரிகள் இந்த தேர்வு குறித்து பேசும்போது “முன்னாள் லெஜண்ட் வீரர்களின் மகன்களான ஆர்யவீர் மற்றும் அன்வய் இருவரையும் இந்திய அண்டர்-19 ஒருநாள் டீமில் சேர்த்திருப்பது இளைஞர்களுக்கு மிகப்பெரிய பூஸ்ட் கொடுக்கும் என்று நம்புகிறோம்” என்று கூறி இருக்கிறார்கள்.
மேலும் இந்தத் தொடரைப் பற்றி தேர்வுக்குழு தொடர்ந்து பேசும்போது “ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட சீரிஸ் செப்டம்பர் மாதம் ராஜ்காட் மைதானத்தில் நடைபெற உள்ளது என்றும், இதில் இவர்கள் சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவுவார்கள்” என்று கூறி முடித்திருக்கிறார்கள்.






