நாங்க எல்லாரும் இதைத்தான் பிளான் பண்ணினோம்.. இந்த விஷயம் கையில இல்ல – படிக்கல் பேச்சு

0
0

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டு தொடர் நாயகன் விருதை வென்ற இந்திய அணி பேட்டர் தேவதத் படிக்கல், பிளேயிங் 11 தேர்வு மற்றும் அணியில் தனக்கு கிடைத்த வாய்ப்புகள் குறித்துப் பல்வேறு முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

​சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஸ்லோ பிட்ச்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது இளம் பேட்டர்களுக்கு எப்போதுமே ஒரு பெரிய சவாலாகவே பார்க்கப்படுகிறது.

- Advertisement -

​பிளேயர் ஆஃப் தி சீரிஸ் விருது பெற்றது குறித்து படிக்கல் பேசும்போது “இந்த மேட்சிலும் வெற்றி பெற்றிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். இருப்பினும் அணிக்கு எனது பங்களிப்பை அளித்ததில் மகிழ்ச்சி. காலி மற்றும் எஸ்எஸ்சி பிட்ச்கள் இரண்டுமே ஸ்லோவாகத் தான் இருந்தன. டிரஸ்ஸிங் ரூமில் ஸ்பின் பவுலிங்கை எப்படி டேக்கிள் செய்வது என்று விரிவாக விவாதித்தோம். அனைவரும் தெளிவான பிளான்களுடன் வந்து சிறப்பாக செயல்பட்டனர்”

​ “எப்போதும் நாட்டிற்காக விளையாட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். அதற்காகத் தொடர்ந்து ஹார்ட் வொர்க் செய்ய வேண்டும். அதுமட்டுமே நமது கன்ட்ரோலில் இருக்கிறது. பிளேயிங் 11 என்பது நமது கையில் இல்லை. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் டீம்மேட்ஸ்க்கு உதவி செய்யத் தயாராக இருக்க வேண்டும். அதை நான் சரியாகச் செய்ததில் மகிழ்ச்சி” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

​மேலும் தனது பேட்டிங் பொசிஷன் குறித்துத் தெரிவித்த படிக்கல் “இன்னிங்ஸின் தொடக்கத்தில் நமக்கு ஒரு லைஃப் கிடைத்தால் அதை உடனடியாக மறந்துவிட்டு அடுத்த பாலுக்கு மூவ் ஆன் ஆக வேண்டும். ரன்கள் அடிப்பதே எனக்கு முக்கியம். அது நம்பர் 3 அல்லது வேறு எங்கு இருந்தாலும் கவலை இல்லை. அணி வெற்றி பெற எனது பங்களிப்பு இருந்தால் போதும். நமது டீமில் நிறைய இளம் பிளேயர்கள் உள்ளனர். தொடர்ந்து கற்றுக்கொண்டு இம்ப்ரூவ் ஆவது முக்கியம்” என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -