ஒருத்தரும் எங்களுக்கு வாய்ப்பு தரல.. டாடி ஆர்மினு கிண்டல் பண்ணாங்க.. 2018 சிஎஸ்கே சாம்பியன் ஆனது இப்படித்தான்.. பிராவோ உருக்கம்

0
0

2018-ம் ஆண்டு அந்த அணிக்கு மறக்க முடியாத ஆண்டாக அமைந்தது. ஏலத்துக்குப் பிறகு அணியில் வயதான வீரர்கள் அதிகமாக இருப்பதாக கூறி, அந்த அணியால் பெரிய அளவில் சாதிக்க முடியாது என்று பலரும் விமர்சித்தனர். ஆனால் களத்தில் நடந்தது முற்றிலும் வேறாக இருந்தது.

தொடர் முழுவதும் வெவ்வேறு கட்டங்களில் வெவ்வேறு வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முக்கியமான நேரங்களில் அனுபவ வீரர்கள் தங்களது திறமையை நிரூபித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர்.
இதனால் அந்த அணியை பலரும் ‘டாடி ஆர்மி’ என்று அழைக்கத் தொடங்கினர். ஏலத்துக்குப் பிறகு யாருமே தங்களை நம்பவில்லை என்றாலும், அதையெல்லாம் கடந்து அந்த அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

- Advertisement -


இதுகுறித்து பேசிய முன்னாள் சிஎஸ்கே வீரர் திவைன் பிராவோ “2018 எங்களின் கம்பேக் ஆண்டாக இருந்தது. வெவ்வேறு கட்டங்களில் வெவ்வேறு வீரர்களின் சிறப்பான ஆட்டங்களை பார்த்தோம். எங்களை ‘டாடி ஆர்மி’ என்று அழைத்தார்கள். ஏலத்துக்குப் பிறகு எல்லோரும் எங்களை நிராகரித்தனர். யாருமே எங்களுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. அதனால் அந்த வெற்றி எங்களுக்கு மிகவும் சிறப்பானதாக இருந்தது,” என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -