கடந்த சில வாரங்களுக்கு முன்பாக நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வெற்றி பெற்று வரலாறு படைத்தது.
இந்த சூழ்நிலையில் ஐபிஎல் தொடரில் ஆண்ட பரம்பரைகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருத்ராஜ் கெய்குவாட் எம் எஸ் தோனி குறித்து சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் ஆதிக்கம் செலுத்தி வந்த அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் எம் எஸ் தோனியின் தலைமையில் ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வெற்றி பெற்று வரலாறு படைத்தது. தோனி சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதற்கு முன்பாக ஐந்தாவது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்தார். அதற்குப் பிறகு கேப்டன் பொறுப்பை ஏற்ற இளம் வீரர் ருத்ராஜ் கேப்டன் பதவியை ஏற்று சிஎஸ்கே அணியை வழிநடத்தி வருகிறார்.
அவர் ஓரளவு வெற்றிகளை பெற்றுக் கொடுத்தாலும் மூன்றாவது முறையாக சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் போனது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சூழ்நிலையில் சமீபத்தில் பேசிய சிஎஸ்கே கேப்டன் முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனி குறித்த சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
தோனியின் தலைமைத்துவம் குறித்து அவர் பேசும் போது “எம்எஸ் தோனியிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட ஒரு விஷயம் என்னவென்றால் விஷயங்களை எளிதாக வைத்துக் கொள்வது மற்றும் தேவையற்ற சிக்கல்களை உருவாக்கிக் கொள்ளாமல் இருப்பது ஆகும். சில சமயங்களில் அணியின் பொறுப்புள்ள வீரராக முடிவுகளை எடுக்கும் போது நாம் அளவுக்கு அதிகமாக சிந்தித்து விடுவோம். பலவிதமான சாத்திய கூறுகள் மற்றும் விளைவுகள் பற்றி நாம் யோசிப்போம்.
ஆனால் எம் எஸ் தோனி பொருத்தவரை அவர் எல்லாவற்றிலும் மிக எளிமையாகவே அணுகுகிறார். அவர் விஷயங்கள் எளிதாக செல்ல அனுமதித்து அதற்குப் பிறகு அவர் ஒரு முடிவுக்கு வருவார் இதைத்தான் நான் அவரிடம் இருந்து கற்றுக் கொண்ட ஒரு மிகப்பெரிய பண்பாகும்” என்று அவர் பேசி இருக்கிறார்.






