சின்ன வயசுல இருந்தே சொல்லி தராங்க என்ன கத்துக்கிட்டீங்க.. இந்திய வீரரை மறைமுகமாக விளாசிய ஆர் அஸ்வின்

0
154

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த நிலையில் நடைபெற்ற முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்த சூழ்நிலையில் முதல் ஒரு நாள் போட்டியில் ரோகித் சர்மா ஆட்டம் இழந்த விதம் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

இந்த தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 24.5 ஓவர்களில் 194 ரன்கள் குவித்தது. அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா 16 ரன் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் ஆகி ஆட்டம் இழந்தார். போட்டியின் ஆறாவது ஓவரில் விளையாடிய ரோகித் சர்மா சிங்கிள் எடுக்க முயற்சித்து மறுமுனையில் நின்றிருந்த கில் அதனை மறுக்க, ரோகித் சர்மா திரும்பவும் க்ரீசுக்குள் செல்ல முடியாமல் போனதால் ரன் அவுட் ஆக நேர்ந்தது.

இது தொடர்ந்து சர்ச்சையாகிக் கொண்டிருக்கும் நிலையில் தவறுக்கு முக்கிய காரணம் கில் ரன் எடுக்க மறுத்தது தான் என்று விமர்சகர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ரோஹித் சர்மா மீது துளியும் தவறு இல்லை என்று சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் போது “அந்த போட்டியை நான் நேரலையில் பார்த்தேன். விக்கட்டுக்கு முன்னால் விளையாடும் போது இது போன்ற ஒரு நிலை ஏற்படும்போதெல்லாம் பேட்ஸ்மேனின் முடிவைத்தான் மறுமுனையில் நின்றிருக்கும் வீரர் உறுதிப்படுத்த வேண்டும். இதனை ரசிகர்கள் எப்போது உணர்வார்கள் என்று எனக்கு தெரியவில்லை. இதனைப் பற்றி விவாதிப்பது மிகவும் எளிது. கில் அந்த ரன்னை மறுத்தார், இவருக்கும் ரோஹித் சர்மாவிற்கும் இதுபோன்று நடப்பது முதல் முறை அல்ல என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

ஸ்ட்ரைக்கர் ஒரு ரன்னுக்கு ஆம் என்று சொன்னால் மறுமுனையில் நின்றிருக்கும் வீரர் அதனை மறுப்பதற்கு வாய்ப்பு அல்ல. இதனைத் தான் சிறுவயதில் இருந்து அனைத்தையும் கற்றுக் கொடுக்கிறார்கள். இவை அனைத்தும் அடிப்படை விஷயங்கள் எல்லாருமே தவறு செய்கிறார்கள். இது ஒருவரின் தவறு அல்லது மற்றவரின் தவறு என்று நான் சொல்லவில்லை ஆனால் ரோஹித் சர்மா மீது துளியும் தவறு இல்லை என்பதை நான் உறுதிப்படுத்திக் கொள்கிறேன்” என்று அவர் பேசி இருக்கிறார்.

- Advertisement -