இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடருக்கு பிறகு இந்த இரண்டு அணிகள் மோதும் ஒரு நாள் தொடரானது இன்று முதல் நடைபெற உள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட ருத்ராஜ் கெய்க்வாட் குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சில முக்கிய விஷயங்களைப் பகிர்ந்து இருக்கிறார்கள்.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற பிறகு மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரானது இன்று முதல் நடைபெற உள்ளது. இதில் இந்திய அணியின் வீரரும் சிஎஸ்கே கேப்டனுமான ருத்ராஜ் கெய்க்வாட் இந்த தொடரில் இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் ருத்ராஜ் கடைசியாக நடைபெற்ற முடிந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் சதம் அடித்து அசத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் அவரது பெயர் இடம் பெறாதது ஆச்சரியம் அளிப்பதாக இந்திய முன்னால் கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் போது “தற்போதைய இந்திய அணியில் மாற்று வீரராகவாவது இவரிடம் பெற்று இருக்க வேண்டும். இந்தியாவுக்காக கடைசியாக ஆடிய ஒரு நாள் போட்டியில் சதம் அடித்த அவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் என்ன செய்தார் என்று கேட்பதே தவறு. ஒருவேளை அதையும் கணக்கில் கொண்டால் கூட, விஜய் ஹசாரே கோப்பையில் ருதுராஜ் 82 என்ற சராசரியை வைத்து சிறப்பாக விளையாடியிருக்கிறார்.
எனவே அதனைக் கூட கருத்தில் கொள்ளவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது. தனது சர்வதேச கிரிக்கெட்டில் சதம் அடித்த ஒரு வீரர் இந்திய ஏ அணிக்காக கூட விளையாட பரிந்துரைக்காமல் போனது வருத்தத்தை ஏற்படுத்துகிறது. ரியான் பராக்கைப் போன்ற ஒரு வீரருக்குப் பதிலாக ‘ஏ’ அணியில் இடம்பெற வேண்டிய நிலை ஏற்பட்டதைக் கண்டு ருதுராஜ் கூட ஆச்சரியப்பட்டிருப்பார். விராட் கோலிக்கு பதிலாக இடம் பெற்று இருந்த ஜெய்ஸ்வால் கூட தனது கடைசி இன்னிங்ஸில் சதம் அடித்திருந்தார்” என்று அவர் பேசியிருக்கிறார்.






