இந்தியா ஏ கிரிக்கெட் அணி தற்போது இலங்கை ஏ மற்றும் ஆப்கானிஸ்தான் ஏ கிரிக்கெட் அணிகளுக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடி வரும் 15 வயது வீரர் வைபவ் சூரியவன்சி குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
தற்போது நடைபெற்ற முடிந்த ஐபிஎல் தொடரில் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த 15 வயது இளம் அதிரடி கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்சி இந்த ஆண்டுக்கான அதிக ரன்கள் குவித்த ஐபிஎல் வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றினார். வெறும் 15 வயதில் அவரது அதிரடி ஆட்டம் கிரிக்கெட் உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இதன் எதிரொளியாக இந்திய அணி அடுத்த டி20 தொடருக்கு இவரது பெயரை சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது அவர் இந்திய ஏ அணியோடு ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறார். விரைவில் அவர் இந்தியாவின் நிரந்தர துவக்க வீரராக வருவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் இருக்கின்றன. இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான வாசிம் ஜாஃபர் 13 வயதிலிருந்தே அவரை தனக்கு நன்றாக தெரியும் எனவும், இவ்வளவு சிறிய வயதில் அவரது திறமையை பார்த்து ஆச்சரியப்பட்டு இருக்கிறேன் எனவும் சில முக்கிய விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் போது “நான் 19 வயதுக்குட்பட்ட வங்கதேச அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்தேன். அப்போது இந்தியாவில் இருந்து இரண்டு அணிகளும் இங்கிலாந்தில் இருந்த ஒரு அணியும் பங்கேற்றன. அப்போது இந்திய அணியில் வைபவ் இருந்தான். 19 வயது உட்பட்டோருக்கான தொடரில் ஒரு 13 வயது சிறுவன் இருப்பதை பார்த்து நான் ஆச்சரியமடைந்தேன். நான் அவனை முதன் முதலில் விஜயவாடாவில் சந்தித்தேன்.
அப்போது அவனுக்கு என்னை தெரிந்திருந்தது என்னிடம் பேச விரும்பினான். என் நம்பரை வாங்கிக்கொண்டு எப்போது வேண்டுமானாலும் எனக்கு நீ போன் செய்யலாம் என்று அவனிடம் கூறினேன். இறுதியில் அவர் ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பைக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை. நான் 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் குறித்து பேசுகிறேன். அவர் எனக்கு அழைப்பார் நாங்கள் பலமுறை சந்தித்துள்ளோம் அவரது வளர்ச்சியை பார்ப்பதற்கு அற்புதமாக இருக்கிறது. நான் மீண்டும் சொல்கிறேன் இந்த சிறுவனுக்காகவே தற்போது நடந்து முடிந்த ஐபிஎல் தொடர் நினைவு கூறப்படும்” என்று பேசி இருக்கிறார்.






