நேற்று லக்னா அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ப்ளே ஆப் வாய்ப்பைத் தக்க வைத்தது. இந்த போட்டியில் கேப்டனாக செயல்பட்ட ஜெய்ஸ்வால் வெற்றி குறித்து பேசி இருக்கிறார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ ஐந்து விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய ராஜஸ்தான் அணிக்கு கேப்டன் ஜெய்ஸ்வால் 23 பந்துகளில் 43 ரன், வைபவ் சூரியவன்சி 38 பந்தில் 93 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் எளிதாக வெற்றி பெற உதவினார்கள்.
எதிர்கால வீரர்கள்
தற்போது ராஜஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் சூரியவன்சி விளையாடி வருகிறார்கள். இவர்கள் இருவரும் இந்திய வெள்ளை பந்து கிரிக்கெட்டில் தொடக்க ஆட்டக்காரர்களாக வரவேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.
இருவருமே இடது கை வீரர்கள் என்றாலும் போட்டியின் தேவைக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொண்டு விளையாடக்கூடிய திறமை படைத்தவர்களாக இருக்கிறார்கள். அபிஷேக் ஷர்மா போல எல்லா நேரத்திலும் ஒரே மாதிரி ஆடி ஆட்டம் இழக்க கூடியவர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத்தான் பேசிக் கொண்டோம்
இந்த போட்டி குறித்து பேசி உள்ள ஜெய்ஸ்வால் கூறும் போது ” 220 ரன்கள் துரத்த வேண்டும் என்கின்ற பொழுது நாங்கள் எங்கள் திட்டங்களை எளிதாக வைத்துக் கொண்டு அமைதியாக இருந்தோம். களத்திற்கு சென்று எங்கள் ஷாட்டை விளையாட முடிவு செய்தோம். இந்தப் போட்டியில் இருவரில் யாராவது ஒருவர் கடைசி வரையில் விளையாட வேண்டும் என்று பேசிக்கொண்டோம். அந்த வேலையை சூரியவன்சி செய்தார்”
இதையும் படிங்க : நான் ரொம்ப வருஷம் ஆடப் போறேன்.. அதனால மக்கள்கிட்ட இத பத்தி கவலைப்பட மாட்டேன்.. என் கவனம் இதுதான் – சூரியவன்சி பேச்சு
“அடுத்த போட்டி பற்றியும் அமைதியாக இருப்பது பற்றியும் பேசும்போது, நான் இந்த விளையாட்டை சிரிப்புடன் எதிர் கொண்டு விளையாடவே விரும்புகிறேன். இந்த விளையாட்டை அனுபவித்து விளையாட வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம். ரசிகர்களின் அன்பையும் ஆதரவையும் அனுபவிக்க வேண்டும். சமநிலை தவறாமல் எல்லா நேரத்திலும் ஒரே போல இருக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.






