நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிராக முக்கியமான போட்டியில் சிஎஸ்கே கேப்டன் ருதராஜ் 21 பந்தில் வெறும் 15 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டம் இழந்தார். இது அந்த அணியின் தோல்விக்கு முக்கியமான காரணமாக அமைந்தது. இது குறித்து ஸ்ரீகாந்த் விமர்சனம் செய்திருக்கிறார்.
இந்த போட்டியில் சிஎஸ்கே 180 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய ஹைதராபாத் ஒரு ஓவர் மீதம் வைத்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் இந்த வெற்றியால் ஹைதராபாத் ப்ளே ஆப் சுற்றுக்குள் நுழைய சிஎஸ்கே பிளே ஆப் வாய்ப்பில் வெளியேறியது.
ருதுராஜ் காரணம்
ருதுராஜ் தொடக்க ஆட்டக்காரராக பவர் பிளேவை பயன்படுத்தி ரன்கள் எடுக்க வேண்டிய இடத்தில் இருக்கிறார். ஆனால் அவர் இந்த ஐபிஎல் தொடரில் பவர் பிளேவில் எதிரணி பவுலர்கள் மீது எந்த அழுத்தத்தையும் ஏற்படுத்தவில்லை. நேற்றைய போட்டியில் 21 பந்துக்கு 21 ரன் கூட எடுக்கவில்லை. இது சிஎஸ்கே வெற்றியை பெரிய அளவில் பாதித்துள்ளது.
இது குறித்து ஸ்ரீகாந்த் பேசும்போது “ருதுராஜ் செய்வது எல்லாமே தற்காப்பு ஆட்டம் தான் எனவே அவர் பெயரை டக்ராஜ் என்று மாற்ற வேண்டும். அவர் என்ன மாதிரியான கிரிக்கெட் விளையாடுகிறார்? அவரை அவுட் செய்ய ஆன்சைட்டில் ரெகுலராக ஒரு திட்டத்தை கொண்டு வருகிறார்கள். இவரும் ஒரே தவறை செய்து மீண்டும் மீண்டும் அவுட் ஆகிறார்”
ஏற்றுக்கொள்ளவே முடியாது
“நேற்று அவர் விளையாடிய விதத்தை ஏற்றுக் கொள்ளவே முடியாது. இவர் அதிரடியாக விளையாடாத காரணத்தினால் தான் மற்ற எல்லா பேட்ஸ்மேன்களும் அழுத்தம் ஏற்பட்டு தேவையில்லாமல் விளையாடி விக்கெட்டை இழந்தார்கள்”
இதையும் படிங்க : ஆப்கான் டெஸ்ட் ODI தொடர்கள்.. இந்திய அணி அறிவிப்பு.. 4 புதிய வீரர்களுக்கு வாய்ப்பு.. முக்கிய வீரர்கள் நீக்கம்
“நேற்று அவர் சந்தித்த 21 பந்தில் 25 ரன்கள் எடுத்திருந்தால் கூட சிஎஸ்கே வெற்றி பெறுவதற்கு ஒரு வாய்ப்பு உருவாகி இருக்கும். அதிரடியாக ஆரம்பித்த சஞ்சு சாம்சன், இவர் அதிரடியாக விளையாடாததால்தான் ஆட்டம் இழந்து வெளியேற வேண்டியதாக இருந்தது” என்று கூறியிருக்கிறார்.






