நேற்று சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து கேப்டன் ரிஷப் பண்ட் பேசியிருக்கிறார்.
முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய லக்னோ அணிக்கு மிச்சல் மார்ஸ் 38 பந்தில் 90 ரன்கள் குவித்தார். அந்த அணி 16.4 ஓவரில் மூன்று விக்கெட் இழப்புக்கு இலக்கை ஏற்றி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மோசமான சீசன்
லக்னோ அணி உருவாக்கப்பட்டதிலிருந்து இந்த ஆண்டு ஐபிஎல் சீசன் அவர்களுக்கு மிகவும் மோசமானதாக அமைந்திருக்கிறது. தற்போது 12 போட்டிகளில் விளையாடி இருக்கும் லக்னோ அணி நான்கு போட்டிகளை மட்டும் வென்று 8 புள்ளிகள் எடுத்து புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தில் இருக்கிறது.
மேலும் கேப்டன் மற்றும் பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட் செயல்பாடு மிகவும் சுமாராக இருந்து வருகிறது. இந்த நிலையில் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் நேற்று சொந்த மைதானத்தில் அந்த அணி வெற்றி பெற்றது மகிழ்ச்சியானதாக லக்னோ அணி நிர்வாகத்திற்கு அமைந்திருக்கிறது.
இதனால் தோற்றோம்
இது குறித்து ரிஷப் பண்ட் பேசும்போது “வெற்றி பெற்றது உண்மையில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. முதல் மூன்று இடங்களில் வெளிநாட்டு வீரர்கள் விளையாட நான்காவது இடத்தில் நான் வருவேன் என்று இருந்தது. மற்ற வீரர்கள் வாய்ப்பு கிடைக்காதவர்கள் விளையாட வேண்டும் என்பதற்காக நேற்று நான் பேட்டிங் செய்ய வரவில்லை”
இதையும் படிங்க : நாங்கள் இந்த திட்டத்தை முழுசா நம்பினோம்.. ஆனா மிச்சல் மார்ஸ் மொத்தமா மாத்திட்டாரு – சிஎஸ்கே கேப்டன் கவலை
“ஆகாஷ் சிங் பந்துவீச்சில் மிகவும் கடுமையாக உழைத்து வருகிறார். அவருடைய வாய்ப்பில் ஏதாவது செய்ய முடியுமா? என்று பார்க்கக் கூடியவர். இந்த சீசனில் நாங்கள் மோசமான நிலையில் இருப்பதற்கு காரணம் நாங்கள் அதிகமாக சிந்தித்து தவறான முடிவுகளை எடுத்து விட்டோம். மற்றபடி உண்மையில் இது மிகவும் அருமையான அணி” என்று கூறி இருக்கிறார்.






