நடப்பு ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா மும்பை அணியை விட்டு வெளியேறிவிட்டதாக தான் நினைப்பதாக ஸ்ரீகாந்த் தெரிவித்திருக்கிறார்.
மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்துவிட்டது. மேலும் ஹர்திக் பாண்டியாவை அந்த அணி விளையாடாமல் வெளியில் வைத்துள்ளது. எனவே மும்பைக்கு அவர் இனி விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது.
வெளியே அனுப்பி விட்டார்கள்
எப்போதும் இல்லாத அளவுக்கு ஹர்திக் பாண்டியா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி மிகவும் மோசமான முறையில் விளையாடி வருகிறது. மேலும் வீரர்களிடம் ஒற்றுமை இல்லாதது போலவும் தெரிகிறது. எனவே அவரை கைவிட மும்பை இந்தியன்ஸ் முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து ஸ்ரீகாந்த் கூறும் போது “தற்போதைய நிலவரத்தை பார்க்கும் போது ஹர்திக் பாண்டியாவை வீட்டை விட்டு வெளியேறும்படி மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் கூறிவிட்டதாக தெரிகிறது. எனவே அடுத்த சீசனில் இருவரும் பிரிந்து விடுவார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் நல்ல முறையில் பிரிந்து செல்ல வேண்டும். இப்போது மும்பை புதிய வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து பரிசோதிக்க வேண்டும்”
பும்ரா பரிதாபம்
“இன்னொரு பக்கத்தில் பும்ராவை பார்ப்பதற்கு மிகவும் பரிதாபமாக இருக்கிறது எனவே அவருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். இல்லை அவரிடம் இப்போதே கேப்டன் பதவியை கொடுத்து அடுத்த மூன்று போட்டிகளுக்கு பரிசோதிக்கலாம் என்று நினைக்கலாம். ஆனால் தற்போது ஓய்வு கொடுத்து அடுத்த ஆண்டு அவரிடம் அணியை ஒப்படைப்பது சரி”
இதையும் படிங்க : நேத்து விராட் களத்துல செஞ்ச ஒரு விஷயம் உலகத்துல யாரும் செய்ய மாட்டாங்க.. மனுஷன் ஆடறதே இதுக்கு தான் – முகமது கைஃப் பேச்சு
“மேலும் சூரியகுமார் மற்றும் ரோஹித் சர்மா இருவருக்கும் ஓய்வு கொடுப்பது சரிதான். ஏனென்றால் சூரியகுமாருக்கு ஓய்வு மனரீதியாக தேவைப்படுகிறது. இந்த நேரத்தில் மும்பை அணியில் உள்ள மற்ற புதிய வீரர்கள் அனைவருக்கும் மூன்று போட்டிகளில் கொடுக்கும் வாய்ப்பை வைத்து அவர்களை கண்டறியலாம்” என்று கூறியிருக்கிறார்.






