தொடர் 4 தோல்விகள்.. 30 ரன் எக்ஸ்ட்ரா எடுத்தும் தோத்துட்டோம்.. அதுக்கு முக்கிய காரணம் இதுதான் – ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டி

0
19
Shreyas

நேற்று பஞ்சாப் கிங்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மூன்று விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த தோல்வி குறித்து கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேசியிருக்கிறார்.

இந்த ஐபிஎல் தொடரில் முதல் ஏழு போட்டிகளில் ஆறு வெற்றிகள் மற்றும் ஒரு முடிவில்லாத போட்டி என தோல்வி அடையாமல் இருந்து வந்தது பஞ்சாப் அணி. ஆனால் இதற்கு அடுத்து தொடர்ந்து நான்கு போட்டிகளை தோற்று உள்ளது.

- Advertisement -

மந்தமான பிளே ஆப் வாய்ப்பு

தற்போது 11 போட்டிகளில் 13 புள்ளிகள் உடன் பஞ்சாப் அணி உள்ளது. மேலும் மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகளை வென்றால்தான் அந்த அணியால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். ஒருவேளை தகுதி பெற முடியாவிட்டால் அது மிகப் பெரிய பின்னடைவு.

பஞ்சாப் அணி தொடர்ந்து பேட்டிங்கில் நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது. ஆனால் அவர்களுடைய பந்து வீச்சு மிகவும் மோசமான முறையில் மாறி இருக்கிறது. 200க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்தால் கூட அந்த அணி பந்துவீச்சு சுமாராக மாறி உள்ளதால் அவர்களால் வெற்றி பெற முடிவதில்லை.

- Advertisement -

இதுவே முக்கிய காரணம்

இதுகுறித்து ஸ்ரேயாஸ் ஐயர் பேசும்போது “இந்த ஆடுகளத்தில் பந்து பவுன்ஸ் மாறி மாறி வந்தது. இங்கு நாங்கள் 210 ரன்கள் எடுத்திருக்கிறோம். எனவே நான் ஒரு 30 ரன்கள் கூடுதலாக எடுத்து இருக்கிறோம் என்றுதான் உணர்ந்தேன். சாகலை நடுவில் ஒரு ஓவருக்கு கொண்டு வரலாம் என்று நினைத்தேன். ஆனால் பந்து நல்ல முறையில் சீம் காரணத்தினால் நான் அந்த முடிவை மாற்றிக் கொண்டேன்”

இதையும் படிங்க : ஸ்ரேயாஸ் ஐயர் அவரை நம்பாதது தான்.. பஞ்சாப் அணியின் தொடர் தோல்விகளுக்கு மிக முக்கிய காரணம் – இந்திய முன்னாள் வீரர்

“பொதுவாக பந்தை ஹார்ட் லென்த்தில் வைத்தால் போதும். கொஞ்சம் லென்த் இன்னும் குறைவாக இருந்தால் கூட பிரச்சனை கிடையாது. எப்படியும் நான்கு பந்துகளில் ஒரு பந்து மிஸ் ஹிட் ஆகிவிடும். எப்படியும் விக்கெட் கைப்பற்றி விடலாம் என்பது என்னுடைய திட்டமாக இருந்தது. ஆனால் நேற்று திட்டத்தை சரிவர செயல்படுத்தாததுதான் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -