தற்போது டெல்லி கேப்பிட்டல்ஸ் தலைமை பயிற்சிளர் பொறுப்பில் இருந்து வரும் ஹேமங் பதானி குறித்து ஸ்ரீகாந்த் கடுமையான முறையில் விமர்சனம் செய்திருக்கிறார்.
நேற்று ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் 9 ரன்னுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் 75 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
பதானி விமர்சனம்
முன்பு ஒரு முறை சிஎஸ்கே பயிற்சியாளர் பிளமிங் பற்றி பேசியிருந்த பதானி ” நான் அவரை ஒரு வெற்றிகரமான பயிற்சியாளர் என்று சொல்ல மாட்டேன். அப்படி யாராவது சொன்னால் நான் அதை ஏற்றுக் கொள்ள மாட்டேன். ஏனென்றால் அவர் தோனி இருப்பதால் மட்டுமே வெற்றிகரமாக இருக்கிறார். தோனி இல்லாமல் வெளிநாட்டு தொடர்களில் அவர் எந்த வெற்றியையும் பெறவில்லை” என்று விமர்சனம் செய்திருந்தார்.
தற்போது அவருடைய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மிகவும் சுமாரான முறையில் விளையாடுகிறது. மேலும் பயிற்சியாளராக அவருடைய சில முடிவுகள் மோசமான முறையில் சென்று இருக்கின்றன. டெல்லி சரியான முறையில் சென்று தானாகவே தோல்வி அடைவதற்கு பயிற்சியாளர்கள் எடுக்கும் முடிவே காரணம் என அஸ்வின் வரை விமர்சனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீகாந்த் விமர்சனம்
இதுகுறித்து ஸ்ரீகாந்த் பேசும்போது “ஏய் பதானி மற்றவர்களை நீ பேசுவதற்கு முன்னால் உன்னை நீ கவனித்துக் கொள்ள வேண்டும். நான் இதை வாழ்க்கையில் எப்போதும் சொல்வது உண்டு. வாழ்க்கையில் அதிகம் பேசாதே. ஆனால் அவன் நிறைய பேசி விட்டான். எனவே இப்போது நடப்பதை அவன் வாயை மூடிக் கொண்டு வேடிக்கை பார்க்க வேண்டும்”
இதையும் படிங்க : சூரியவன்சியை தூக்க என்னிடம் இந்த பிளான் இருக்கு.. பஞ்சாப் இதை செய்ய வேண்டும் – புஜாரா யோசனை
“தற்போது பதானி பேசியதை எடுத்து வைத்து எல்லோரும் அவரை திட்டுகிறார்கள். நீங்கள் உங்கள் வேலையில் கவனம் செலுத்தாமல் மற்றவர்களை பற்றி பேசி விட்டீர்கள். தோனியால் மட்டுமே பிளமிங் வெற்றி பெற்றார் என சொல்வதற்கு நீங்கள் யார்? நீங்கள் சிறப்பாக என்ன செய்து விட்டீர்கள்?” என்று கூறியிருக்கிறார்.






