இப்ப எனக்கு சக்தி கிடைச்சிருச்சு.. அடுத்து நான் பெரிய ரன் அடிக்கப் போறேன்.. யாரும் கவலைப்படாதீங்க – ருதுராஜ் பேச்சு

0
32
Ruturaj

இன்று ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிராக சிஎஸ்கே தங்கள் சொந்த மைதானத்தில் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது ஐந்தாவது போட்டியில் கிடைத்த இரண்டாவது வெற்றியாகும். மேலும் புள்ளி பட்டியலில் எட்டாவது இடத்திற்கு முன்னேறியது.

இந்த போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் மட்டுமே எடுத்தது. முக்கிய மூன்று விக்கெட் வீழ்த்திய நூர் அகமது ஆட்டநாயகன் விருது வென்றார்.

- Advertisement -

ஆடுகளம் மாறிவிட்டது

இது குறித்து கேப்டன் ருதுராஜ் பேசும்போது ” இந்த வெற்றி மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த போட்டியில் ஆடுகளம் ஏழு, எட்டு ஓவர்களுக்கு பிறகு மாறிவிட்டது. ஆடுகளத்தில் பந்து திரும்பியதோடு கொஞ்சம் நின்றும் வந்தது. தாங்கள் இதனால் 180 ஸ்கோர் தாண்டி எவ்வளவு கிடைத்தாலும் சரி என்று நினைப்போம். ஆனால் ஆரம்பத்தில் 210 முதல் 220 ரன்கள் எடுக்க வேண்டும் என்று நினைத்தோம்”

“இன்று பந்துவீச்சு சிறப்பாக இருந்தது அணியில் எல்லா விஷயங்களும் கொஞ்சம் கொஞ்சமாக சரியான மாறி வருகிறது எல்லோரும் தங்களது ரோலை சரியாக புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். என்ன நீளத்தில் வீச வேண்டும் என்பதை தாமாகவே புரிந்து கொண்டு சூழலுக்கு ஏற்ப செயல்படுகிறார்கள். பேட்டிங்கில் ஏதாவது சரிவு ஏற்பட்டால் பிரசாந்தை பயன்படுத்த நினைத்தோம். ஆனால் அப்படி நடக்கவில்லை”

- Advertisement -

ரன் சீக்கிரத்தில் வரும்

“இன்று நாங்கள் சரியான முறையில் கேட்ச் பிடிக்கவில்லை. சில கேட்ச் எடுத்து சில கேட்ச் வாய்ப்புகளை தவற விட்டோம். கொஞ்சம் பனிப்பொழிவு இருந்ததால் ஈரம் கைகளில் அதிகமாக இருந்தது. நாங்கள் இன்னும் கொஞ்சம் இதில் சிறப்பாக இருந்திருக்க வேண்டும்”

இதையும் படிங்க: நான் டாஸ் ஜெயிக்காதது ஒரு பிரச்சனை கிடையாது.. அங்க சேப்பாக்கத்துல ஒரு விஷயத்தை கண்டுபிடிச்சிட்டோம் – ருதுராஜ் பேச்சு

“அணி தொடர்ந்து தோல்வியடைந்து வருவது மனதில் கொஞ்சம் பாதிப்பை ஏற்படுத்தியது. இப்போது நம்பிக்கையாக உணர்கிறேன். அணிக்கு என்ன தேவையோ அதில் மட்டுமே கவனம் செலுத்த நினைக்கிறேன். என்னிடமிருந்து ஒரு பெரிய இன்னிங்ஸ் பக்கத்தில் இருக்கிறது. சீக்கிரம் அதை செய்து காட்டுவேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -