நேற்று குஜராத் அணிக்கு எதிராக சுலபமாக வெல்ல வேண்டிய போட்டியை டேவிட் மில்லர் எடுத்த தவறான முடிவால் டெல்லி தோற்றது. இது குறித்து ஹர்பஜன் சிங் விமர்சனம் செய்திருக்கிறார்.
இந்த போட்டியில் 20 வது ஓவரின் ஐந்தாவது பந்தில் சிங்கிள் எடுப்பதற்கான வாய்ப்பை டேவிட் மில்லர் மறுத்துவிட்டார். அந்த நேரத்தில் இரண்டு பந்துக்கு இரண்டு ரன்கள் தேவைப்பட்டது. அவரது முடிவால் ஒரு பந்துக்கு இரண்டு ரன் என்று நிலைமை மாறியது. பிறகு கடைசி பந்தில் ரன் இல்லாததால் அந்த அணி தோல்வி அடைந்தது.
டேவிட் மில்லர் சொதப்பல்
உலகில் எந்த ஒரு அணியிலும் முதலில் சூப்பர் ஓவருக்கு இருக்கும் வாய்ப்பை எடுத்துக் கொள்ள நினைப்பார்கள். மேலும் டேவிட் மில்லர் உடன் இருந்த குல்தீப் யாதவ் ஓரளவுக்கு நன்றாகவே பேட்டிங் செய்வார். எனவே அவரை நம்பி சிங்கிள் எடுத்திருக்க வேண்டும்.
மேலும் டேவிட் மில்லர் இதற்கு முன்பு குஜராத் கோப்பையை வென்ற பொழுது அந்த அணியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை மனதில் வைத்து ஹர்பஜன் சிங் கடுமையான முறையில் விமர்சனம் செய்திருக்கிறார்.
யாருக்காக ஆடுகிறீர்கள்?
இது குறித்து பேசி உள்ள ஹர்பஜன் சிங் கூறும்போது ” டேவிட் மில்லர் ஹீரோ போல நடிக்க நினைத்து நானே கடைசி பந்தில் இரண்டு ரன்கள் எடுக்கிறேன் என்று சொன்னார். கடைசியில் என்ன நடந்தது ஒரு ரன் கூட எடுக்காமல் தோல்வியடைந்தார்கள். அவர் செய்ததை பார்த்தால் இப்போது கூட குஜராத் அணிக்காகவே அவர் விளையாடுவதைப் போல இருக்கிறது”
இதையும் படிங்க: பும்ராவ பார்க்கல பந்தை தான் பார்த்தேன்.. அவருக்காக ஸ்பெஷலா இந்த ப்ராக்டீஸ் பண்ணினேன் – வைபவ் சூர்யவன்சி தகவல்
“மேலும் குல்தீப் யாதவ் பந்தை நன்றாக இணைத்து ஆட கூடிய பேட்ஸ்மேன். நீங்கள் அவருக்கு வாய்ப்பு கொடுத்திருந்தால் நிச்சயம் அவரால் ரன் எடுக்க முடியும். ஒருவேளை அவர் ரன் எடுக்காவிட்டாலும் போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றிருக்கும். உங்களுடைய அணி தொடர்ந்து ஆட்டத்தில் இருந்திருக்கும். மில்லர் செய்தது பெரிய தவறு” என்று கூறி இருக்கிறார்.






