நேற்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி பரபரப்பான போட்டியில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் தோல்விக்கான காரணம் குறித்து சுப்மன் கில் பேசியிருக்கிறார்.
இந்த போட்டி நடைபெற்ற ஆடுகளம் முதலில் பேக்கிங் செய்யும் பொழுது கொஞ்சம் மெதுவாக இருந்தது. இதன் காரணமாக குஜராத் டைட்டன்ஸ் பேட்ஸ்மேன்களால் அதிரடியாக விளையாட முடியவில்லை. அடுத்து பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங் செய்யும்பொழுது மழை வந்ததால் பந்து நாட்டுக்கு நன்றாக வந்தது குறிப்பிடத்தக்கது.
இதனால்தான் தோற்றோம்
இந்த நிலையில் கடைசி கட்டத்தில் விக்கெட்டுகளை வேகமாக இழந்த குஜராத் டைட்டன்ஸ் அணி மேற்கொண்டு 20 ரன்கள் எடுக்கும் வாய்ப்பை கோட்டை விட்டது. இதனால் 162 ரன் மட்டும் எடுத்து, அடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது.
இதுகுறித்து சுப்பன் கில் பேசும் பொழுது “நாங்கள் சிறப்பாக பவுலிங் செய்தோம். ஆனால் நாங்கள் கடைசி கட்டத்தில் நல்ல முறையில் பேட்டிங் செய்யவில்லை. அந்த இடத்தில் இன்னும் கொஞ்சம் நாங்கள் அதிரடியாக விளையாடியிருக்க வேண்டும். இது 200 ரன் அடிக்கும் ஆடுகளம் கிடையாது. ஆனால் நாங்கள் 175 ரன் எடுத்திருக்க முடியும். ஆடுகளத்தில் வேகம் இல்லாததால் சிக்கிக் கொண்டோம். அவர்கள் விளையாடும் பொழுது மழை வந்து நிலைமை மாறிவிட்டது”
இவர் பெரிதாக வருவார்
“பிரசித் கிருஷ்ணாவை பவுலிங் செய்ய இன்னும் முன்பே கூட்டிக் கொண்டு வந்திருக்கலாம். ஆனால் அவரை தாமதமாக கொண்டு வந்ததால் நாங்கள் தொடர்ந்து போட்டியில் இருந்தோம். எப்போதும் கிரிக்கெட்டில் அப்படி நடந்தால் இப்படி நடந்தால் என்ற எண்ணங்கள் இருக்கும்”
இதையும் படிங்க : கில் அப்படி ஒரு காரியத்தை செய்வார்னு நினைக்கல.. என்கிட்ட யாரும் அப்படி நடந்ததில்ல – ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டி
“அறிமுக வேகப் பந்துவீச்சாளர் அசோக் சர்மா ஆரம்பத்திலும் இறுதியிலும் நன்றாகவே பந்து வீசினார். அவரால் மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் வீச முடிகிறது. அவருக்கு அதிகப்படியான வாய்ப்பு கொடுக்கும் பொழுது அவர் சிறந்த வீரராக வருவார். நான் ஒரு கேம்பில் அவரை சந்தித்தேன். அப்பொழுதே அவரது பந்து வீச்சால் நான் ஈர்க்கப்பட்டு விட்டேன்” என்று கூறியிருக்கிறார்.






