நேற்று சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் சிவம் துபே விக்கெட்டை கைப்பற்ற தான் என்ன மாதிரியான திட்டத்தை தீட்டினேன் என்று ரவீந்திர ஜடேஜா கூறியிருக்கிறார்.
இந்த ஐபிஎல் தொடருக்கு சிஎஸ்கே அணியில் இருந்து டிரேடிங் முறையில் ரவீந்திர ஜடேஜா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. சிஎஸ்கே அணியின் முகமாக இருந்த ரவீந்திர ஜடேஜா இன்றைய போட்டியில் எதிராக எப்படி விளையாடுவார்? என்று எதிர்பார்ப்பு நிலவியது.
ஒரு ஓவர் மேஜிக்
இந்த போட்டியில் சிஎஸ்கே ஒரு பக்கம் விக்கெட்டுகளை வேகமாக விட்டுக் கொண்டிருந்தது. இன்னொரு பக்கத்தில் உள்ளே பவுண்டரி மற்றும் சிக்ஸர் அடித்து சர்பராஸ் கான் நல்ல நம்பிக்கை காட்டினார். ஆனால் பந்து வீச்சுக்கு வந்த ஜடேஜா உடனடியாக அவரை அவுட் செய்தார்.
இதைத் தொடர்ந்து உள்ளே வந்த சிவம் துபே ஜடேஜாவின் ஓவரில் தான் சந்தித்த முதல் பந்தையே சிக்ஸருக்கு அடித்தார். அடுத்த பந்தில் ரன் ஏதும் வரவில்லை. இதைத் தொடர்ந்து மூன்றாவது பந்தை ஜடேஜா கொஞ்சம் வெளியில் வீச, அதையும் சிக்ஸர் அடிக்கச் சென்ற சிவம் துபே நேராக கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.
இதுதான் எனது திட்டம்
இதுகுறித்து ரவீந்திர ஜடேஜா தனது திட்டத்தை கூறும்பொழுது “எனக்கு இந்த பின் நிறம் நன்றாக பொருந்தும் என்று நான் நினைக்கிறேன். மேலும் நான் சிவம் துபேவை நீண்ட காலமாக அறிவேன். அதனால் அவர் ஸ்பின்னர்களை எப்படி அணுகுவார்? என்று எனக்கு தெரியும். எனவே நான் அதற்கு தயாராகவே இருந்தேன்”
இதையும் படிங்க :
“இதன் காரணமாக நான் அவருக்கு பந்தை ஆப் ஸ்டெம்ப் வெளியில் கொஞ்சம் வீச முயற்சி செய்தேன். ஏனென்றால் எனக்கு எதிராக அவர் பெரிய ஷாட் அடிக்க செல்வார் என்று எனக்கு தெரியும். ஆனால் ஆடுகளம் கொஞ்சம் ஸ்டிக்கியாக இருந்ததால் சிக்ஸர் அடிப்பது கடினமாக இருக்கும் என்று எனக்கு தெரியும். இதை வைத்துதான் அவரை வீழ்த்தினேன்” என்று கூறியிருக்கிறார்.






