சிஎஸ்கே வேற லெவல் பிளேயிங் XI திட்டம்.. பிளம்மிங்கின் மாஸ்டர் மூவ்.. எக்ஸ்ட்ரா பவுலருக்கு ஸ்கெட்ச்

0
2
CSK

நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதே சமயத்தில் சிஎஸ்கே நிர்வாகம் புத்திசாலித்தனமாக அணியை தேர்வு செய்துள்ளது.

இந்த போட்டியில் சிஎஸ்கே அணிக்கு கடைசி நேரத்தில் டிவால்ட் பிரிவிஸ் காயம் காரணமாக இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மகேந்திர சிங் தோனி அடுத்த சில வாரங்களுக்கு கிடைக்க மாட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சிஎஸ்கே பிளேயிங் லெவன்

இந்தப் போட்டிக்கு ஏற்கனவே தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் மற்றும் சஞ்சு சாம்சன் விளையாடுவார்கள் என்று கூறப்பட்டு விட்டது. இவர்களுக்கு அடுத்து ஆயுஸ் மத்ரே, மேத்யூ ஷார்ட், சிவம் துபே, கார்த்திக் ஷர்மா, ஜேமி ஓவர்டன், நூர் அகமத், மேட் ஹென்றி, அன்சூல் காம்போஜ் மற்றும் கலீல் அகமத்.

மேலும் இம்பேக்ட் பிளேயர்கள் லிஸ்டில் சர்பராஸ் கான், பிரசாந்த் வீர், ராகுல் சகர், குல்ஜப்னித் சிங் மற்றும் ராமகிருஷ்ணா கோஸ் ஆகியோர் இடம் பெற்று இருக்கிறார்கள். சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சிஎஸ்கே புத்திசாலித்தனம்

தற்போது சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்தாலும் எட்டாவது இடத்திற்கான பேட்ஸ்மேனை பிளேயிங் லெவலில் சேர்த்துக் கொள்ளாமல் வெளியில் வைத்திருக்கிறது. இந்த இடத்தில்தான் சிஎஸ்கே ஒரு முக்கியமான புத்திசாலித்தனமான நகர்வை செய்திருக்கிறது.

இதையும் படிங்க : பும்ரா இருந்தும் 220 ரன் குடுப்பீங்களா.. ஹர்திக் பாண்டியா செஞ்ச இந்த தப்ப எல்லாம் ஒத்துக்க முடியாது – இந்திய முன்னாள் வீரர் பேச்சு

ஒருவேளை சிஎஸ்கே டாப் ஆர்டர் நீண்ட நேரம் விளையாடிவிட்டால் இம்பேக்ட் பிளேயராக ஒரு பேட்ஸ்மேனை எடுக்காமல், அடுத்து பந்துவீச்சுக்கு தேவையான ஒரு பவுலரை இம்பேக்ட் பிளேயராக எடுத்துக் கொள்வதற்கு இந்த நகர்வை மேற்கொண்டு இருக்கிறார்கள். ஒருவேளை விக்கெட் சீக்கிரம் விழுந்தால், அவுட் ஆன வீரர்களில் யாருக்காவது பதிலாக ஒரு பேட்ஸ்மேன் இம்பாக்ட் பிளேயராக எடுத்துக் கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -