SRH 400 ரன் அடிச்சாலும் கடவுள் கூட காப்பாத்த முடியாது.. உனன்கட் ஹர்ஷல் படேலாம் பவுலரா? – ஸ்ரீகாந்த் விமர்சனம்

0
6
Srikanth

தற்போதுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 400 ரன்கள் எடுத்தால் கூட வெற்றி பெற முடியாது என கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் விமர்சனம் செய்திருக்கிறார்.

அந்த அணியின் பவுலிங் யூனிட் மிகவும் பலவீனமாக இருக்கின்ற காரணத்தினால் அவர்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

நிதீஷ்குமார் ரெட்டி

நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பந்துவீச்சில் முதல் ஓவரை நிதீஷ் குமார் ரெட்டி வீசினார். ஆனால் மீண்டும் அவர் மூன்றாவது ஓவரை வந்து வீசினார். இது எல்லோரையும் ஆச்சரியப்படும் முடிவாக அமைந்தது. போட்டியின் இரண்டு பவர் பிளேவிலும் மோசமாக செயல்பட்டார்கள்.

இதைத் தொடர்ந்து அவர்கள் அணியில் 140 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் வீசக்கூடிய ஒரு பந்துவீச்சாளர் கூட இல்லை. இதன் காரணமாக ஆடுகளத்தில் இருந்த பவுன்சை அவர்களால் கொஞ்சமும் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை.

- Advertisement -

கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்

இதுகுறித்து கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பேசும்பொழுது ” உங்களுடைய முக்கிய பவுலர்களாக ஹர்ஷல் படேல் மற்றும் ஜெயதேவ் உனன்கட் இருக்கிறார்கள் என்றால் உங்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். இந்த மோசமான பவுலிங் யூனிட்டை வைத்துக்கொண்டு நீங்கள் இன்னும் எத்தனை நாள் தாக்குப் பிடிக்க முடியும்?”

இதையும் படிங்க : தம்பி அபிஷேக் உன் வீக்னஸ் ஃபுல்லா எனக்கு தெரியும்.. அத பேசும்போதே அவுட் ஆயிட்டியேபா – அஸ்வின் விமர்சனம்

“இந்த ஒரு போட்டியை மட்டும் வைத்துக்கொண்டு நான் அவர்களது பவுலிங் யூனிட் மோசமாக இருக்கிறது என்று சொல்லவில்லை. கம்மின்ஸ் வந்தால் கூட அவர்கள் இப்படித்தான் இருப்பார்கள். இந்த நிலையில் இருந்து கொண்டு அவர்கள் ஒவ்வொரு போட்டியிலும் 300 ரன் அடிப்பது குறித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். மேலும் 400 ரன் எடுத்தால் கூட அவர்களால் வெற்றி பெற முடியாது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -