இந்த 2026 ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி எப்படி விளையாட போகிறது என்பதைப் பற்றி அந்த அணியின் கேப்டன் ரஜத் படிதார் கூறியிருக்கிறார். நேற்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக ஆர்சிபி அசத்தலாக ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தற்போது ஆர்சிபி அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என எல்லா பக்கங்களிலும் மிகவும் வலிமையாக உள்ளது. நேற்றைய போட்டியில் ஹேசில்வுட் இல்லாத போதும் உள்ளே வந்த ஜேக்கப் டப்பி மூன்று முக்கிய விக்கெட் கைப்பற்றி வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்து ஆட்டநாயகன் விருது வென்றார்.
இதுதான் திருப்புமுனை
மேலும் பேட்டிங்கில் விராட் கோலி மற்றும் படிக்கல் இருவரும் அதிரடியாக அரைசதங்கள் அடித்தார்கள். கேப்டன் ரஜத் படிதார் தன் பங்குக்கு வெறும் 12 பந்துகளில் 31 ரன்கள் எடுக்க வெறும் 15 ஓவர்களில் 201 இலக்கை துரத்தி அபாரமாக ஆர்சிபி வெற்றி பெற்றது.
இதுகுறித்து ரஜத் படிதார் பேசும் பொழுது “இந்த தொடரின் முதல் போட்டியில் நாங்கள் செயல்பட்ட விதம் மகிழ்ச்சியாக இருக்கிறது. அணியில் எல்லா வீரர்களும் தங்களுடைய பங்களிப்பை கொடுத்து வென்று இருக்கிறார்கள். ஜேக்கப் டப்பி சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அபிஷேக் சர்மா மற்றும் ஹெட் விக்கெட்டுகளை கைப்பற்றியது திருப்புமுனையாக அமைந்தது”
இப்படித்தான் ஆடுவோம்
“எங்களுடைய பேட்டிங் வெறும் அதிரடியாக மட்டுமே இருக்காது. ஆடுகளம் எப்படி இருக்கிறது என்பதை பார்த்து தான் நாங்கள் எங்கள் பேட்டிங் அணுகுமுறையை அமைத்துக் கொள்வோம். நேற்று ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருந்த காரணத்தினால் நாங்கள் அதிரடியாக விளையாடினோம். படிக்கல் விராட் கோலி நல்ல அடித்தளத்தை தந்தார்கள். இதைப்போலவே நாங்கள் எல்லா போட்டியிலும் விளையாடுவோம் என்று சொல்லிக் கொள்கிறேன்”
இதையும் படிங்க: அபிஷேக் ஹெட் சும்மா பேட்ட சுத்தாம இதை செய்யணும்.. விராட் கோலி கிட்ட இதுதான் பெரிய பிரச்சனை – இஷான் கிஷான் பேட்டி
“எனக்கு விராட் கோலி குறித்து சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. சேஸ் செய்யும் பொழுது அவர் முதல் நிலை பேட்ஸ்மேனாக செயல்படுகிறார். அவர் கடைசி வரை இருந்து போட்டியை முடித்தது சிறப்பானது. பில் சால்ட் எடுத்த கேட்ச் அருமையானது. ஒட்டுமொத்தமாக நாங்கள் ஒரே அணியாக விளையாடி வென்றோம்” என்று கூறியிருக்கிறார்.






