தற்போது நடைபெற்று வரும் பாகிஸ்தான் பிஎஸ்எல் டி20 தொடரில் நேற்று ஒரு போட்டியில் பந்து திடீரென பிங்க் நிறத்தில் மாறிய விவகாரம் சமூக வலைதளங்களில் நகைச்சுவையாக மாறி இருக்கிறது.
பாகிஸ்தான் பிஎஸ்எல் டி20 தொடர் மூடிய மைதானங்களுக்கு பின்னால் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடருக்கு ஆரம்பத்தில் இருந்த ரசிகர்களின் வரவேற்பு உள்நாட்டிலேயே குறைய ஆரம்பித்துவிட்டது.
மீண்டும் சிக்கிக் கொண்டார்கள்
கடந்த முறை சாம்பியன்ஸ் டிராபியும் இந்த முறை டி20 உலக கோப்பை தொடரும் பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற காரணத்தினால் பிஎஸ்எல் தொடர் ஐபிஎல் தொடருடன் மோத வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. ஐபிஎல் நடக்கும் நேரத்தில் பிஎஸ்எல் நடப்பதால் அவர்களுக்கு விளம்பர ரீதியாக பெரிய வருவாய் இழப்பு ஏற்பட்டது.
மேலும் ஐபிஎல் தொடரிலிருந்து திடீரென வீரர்கள் யாராவது விலகினால், அவர்களுக்கு மாற்று வீரராக பிஎஸ்எல் தொடருக்கு ஒப்பந்தம் ஆகி உள்ள வெளிநாட்டு வீரர்கள் இந்தியா வந்து விடுகிறார்கள். இதுவும் பிஎஸ்எல் தொடருக்கு பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.
பிங்க் நிறத்தில் மாறிய பந்து
இந்த நிலையில் நேற்று ஹைதராபாத் கிங்ஸ்மேன் அணி பந்து வீசும் பொழுது பந்து பிங்க் நிறத்தில் மாறியது. உடனடியாக நடுவர்கள் பந்தை சோதனை செய்தார்கள். இறுதியில் ஹைதராபாத் கிங்ஸ்மேன் அணியின் ஆடையில் உள்ள சாயம் வெளிப்பட்டு பந்து இந்த நிறத்திற்கு மாறியது தெரிந்தது. வீரர்கள் அணியும் ஆடை இவ்வளவு மலிவான முறையில் தயாரிக்கப்பட்டிருப்பது சர்ச்சையாக மாறியுள்ளது. இதற்குக் கூட காசு இல்லையா என ரசிகர்கள் விமர்சனம் செய்கிறார்கள்.
இதையும் படிங்க : கேப்டன் மீட்டிங்கில் இம்பேக்ட் பிளேயர் ரூல் பத்தி பேசினோம்.. யாருக்கும் பிடிக்கல.. கடைசில இதுதான் நடக்கும் – சுப்மன் கில் பேட்டி
இதுகுறித்து ஹைதராபாத் கிங்ஸ்மேன் வீரர் லபுசேன் பேசும்பொழுது “வீரர்களின் பாட்டில் இருந்து ஏதாவது சாயம் பந்தில் ஏறுவதை நாங்கள் பார்த்திருக்கிறோம். ஆனால் வீரர்களின் ஆடையில் இருந்து சாயம் பந்துக்கு வருவதை இப்பொழுதுதான் பார்க்கிறோம். இந்த பிரச்சனை உடனடியாக சரி செய்யப்பட்டு விடும் என்று நம்புகிறேன்” எனக் கூறியிருக்கிறார்.






