தோனி கிட்ட நேரடியா இந்த விஷயம் பற்றி பேசுவேன்.. ஆனா மீடியா உங்ககிட்ட நான் பேசமாட்டேன் – சவுரவ் கங்குலி கருத்து

0
8
Ganguly

மகேந்திர சிங் தோனியிடம் அவர் குறித்த ஒரு முக்கியமான விஷயத்தை அவரிடமே பேசுவேன் என இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியிருக்கிறார்.

தற்போது மகேந்திர சிங் தோனி, விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா மூவரும் தொடர்ந்து 19வது வருடமாக ஐபிஎல் தொடரில் பங்கேற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் தோனி எல்லோரையும் விட மிகவும் வயதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இது கடைசி சீசனா?

தோனி மூன்று வருடங்களுக்கு முன்பாகவே ஓய்வு பெற்று விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு அடுத்து அவர் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் விளையாடி வருகிறார். ஆனால் அந்த ஒவ்வொரு வருடமும் அவர் ஓய்வு பெறுவார் என்கின்ற கருத்து பரப்பப்படுகிறது.

அதேநேரத்தில் தோனி ஒரு சீசன் விளையாடி முடித்துவிட்டு தான் ஓய்வு பெறுவதை அடுத்த வருடம் கூறுவேன் என சென்று விடுகிறார். முன்பு போல உடல் தகுதி சிறப்பாக இல்லாத காரணத்தினால் அவரால் நிறைய ஓவர்கள் களம் இறங்கி பேட்டிங் செய்ய முடிவதில்லை. இது தற்போது சொந்த அணி ரசிகர்களாலே விரும்பப்படுவதில்லை.

- Advertisement -

கங்குலி கருத்து

இந்த நிலையில் மகேந்திர சிங் தோனியை சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகப்படுத்திய முதல் கேப்டன் சவுரவ் கங்குலியிடம் தோனி ஓய்வு பெறாமல் இருப்பது குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வியை முன் வைத்தார்கள். இதற்கு அவர் சுவாரசியமான பதிலை அளித்திருக்கிறார்.

இதையும் படிங்க : சுப்மன் கில் ஒரு டான்.. அந்த தம்பி நான் சொல்றத மட்டும் செஞ்சா போதும்.. திரும்ப இந்திய அணிக்கு வரலாம் – அஸ்வின் அறிவுரை

இது குறித்து சவுரவ் கங்குலி போகும்போது “நான் இது குறித்து மகேந்திர சிங் தோனியிடம் நேரடியாக பேசுவேன். ஆனால் மீடியா உங்களிடம் இது குறித்து நான் எந்த கருத்தையும் தெரிவிக்க மாட்டேன்” என்று பதில் அளித்தார். அவர் இப்படி கூறியதால் கங்குலிக்கு மகேந்திர சிங் தோனி தொடர்ந்து விளையாடுவதில் விருப்பமில்லை என பேசப்பட்டு வருகிறது.

- Advertisement -